1"முறஞ்செவி யானைத்தடக்கையிற் றடைஇ யிறைஞ்சிய குரல பைந்தாட் செந்தினை வரையோன் வண்மை2 பாடினர் போலக் கிளையோ டுண்ணும் வளைவாய்ப் பாசினங் குல்லை குளவி கூதளங் குவளை யில்லமொடு மிடைந்த வீர்ந்தண் கண்ணியன் சுற்றமை வில்லன் 3செயலைத் தோன்று நற்றார் மார்பற் காண்குறிற் சிறிய 4நற்கவற் கறிய வுரைமின் பிற்றை யணங்கு மணங்கும் போலு மணங்கி வறும்புனங் காவல் விடாமை யறிந்தனி ரல்லிரோ வறனில் யாயே" எனவும் வரும். பாங்கி தலைமகன் முன்னின்று செறிப்பறிவுறுத்தற்குச் செய்யுள்: 5"கானலங் கான்மலர்க் கள்வாய்க் கருங்கணி கட்டுரையாற் கூனலஞ் சாய்பொற் குரலுங்கொய் தாரெமர் கொற்றவயாம் ஏனலங் காவலு மின்றே யொழிந்தன மேழ்புவிக்குந் தானலங் காரமன் னான்றஞ்சை வாணன் றமிழ்வெற்பிலே" எனவும், 6"மால்வரை வெற்ப வணங்குகுரலேனல் காவ லியற்கை யொழிந்தேம்யாம்-தூவருவி பூக்கண் கழூஉம் புறவிற்றாய்ப் பொன்விளையும் பாக்க மிதுவெம் மிடம்" எனவும் வரும். பாங்கி தலைமகன் முன்னின்று செறிப்புணர்த்தி யோம்படை சாற்றற்குச் செய்யுள்:
7"கனஞ்சாய நல்கிய கையுடை யானெதிர் கன்றினர்தம் மனஞ்சாய வென்றருள் வாணன் வரோதயன் மாறைவெற்பிற் சினஞ்சாலும் வேலண்ண லேமற வேலெம்மைச் செவ்வியிரு தனஞ்சா யினுமினி நின்னையல் லாதில்லைத் தாழ்குழற்கே" எனவும்,
1. நற்றிணை, செ: 376.
(பாடம்) 2. போலப் பலவுடன். 3. 'சோலைத்தோன்றும்.' 4. மாற்றவற்கு 5. த. கோ. செ: 153. 6. ஐந்திணைஐம்பது, செ: 12. 7. த. கோ. செ: 154.
|