1"எறிந்தெமர் தாமுழுத வீர்ங்குர லேனல் மறந்துங் கிளியினமும் வாரா-கறங்கருவி மாமலை நாட மடமொழி தன்கேண்மை நீமறவ னெஞ்சத்துக் கொண்டு" எனவும் வரும். தலைமகன் தஞ்சம்பெறாது நெஞ்சொடு கிளத்தற்குச் செய்யுள்: 2"ஏவல ரேய்வழி மாந்தளிர்மேனிய ரேனலினிக் காவல ரேமனங் காத்தனம் யாங்களி யானைசெம்பொன் னாவல ரேபெற நல்குங்கை மேக நறுங்குவளை மாவல ரேய்தொடை யான்றஞ்சை வாணன் வரையில்வந்தே" எனவும், 3"பெறுவ தியையா தாயினு முறுவதொன் றுண்டுமன் வாழிய நெஞ்சே திண்டேர்க் கைவள் ளோரி கானந் தீண்டி யெறிவளி கமழு நெறிபடு கூந்தன் மையீ ரோதி மாஅ யோள்வயி னின்றை யன்ன நட்பி னிந்நோ யிறுமுறை யெனவொன் றின்றி மறுமை யுலகத்து மன்னுதல் பெறுமே" எனவும் வரும். இவற்றுள், கிழவோன் பிரிந்துழிக் கிழத்தி மாலையம் பொழுது கண்டிரங்கலும், பாங்கிபுலம்பலுந், தலைவனீடத் தலைவி வருந்தலும், முன்னிலைப்புறமொழி மொழிதலும், பாங்கியோடு பகர்தலும், நீங்கற்கருமை தலைவி நினைந்திரங்கலும், கிழவோன் தஞ்சம்பெறாது. 'நெஞ்சொடு கிளத்தலும் ஆகிய ஏழும்' இரங்கற்குரிய, இவற்றுள், கிழவோன் தஞ்சம் பெறாது நெஞ்சொடு கிளத்தல் ஒன்று மொழித்து ஏனைய ஆறும் வரைதல் வேட்கைக் குரியவாம். தலைவியைப் பாங்கி கழறலும், தலைவியைப் பாங்கி அச்சுறுத்தலும், தலைவிக்கு அவன்வரல் பாங்கி சாற்றலுமாகிய மூன்றும், வன்புறைக்குரிய; சிறைப்புறமாகச் செறிப்பறிவுறுத்தலும், முன்னிலைப்புறமொழி மொழிந்தறிவுறுத்தலும், முன்னின்றுரைத்தலும், முன்னின்றுணர்த்தி ஓம்படை சாற்றலுமாகிய நான்கும் இற்செறிப்புணர்த்தற்குரிய எனக்கொள்க. இந் நான்கும் வரைவுகடாதற்கும் உரியவாம். (38)
1. ஐந்திணை ஐம், செ: 18. 2. த. கோ. செ: 155. 3. குறுந். செ: 199.
|