1"நந்துசுற் றுங்கடன் ஞலமெல் லாம்புகழ் நாமன்வளர் சந்துசுற் றுங்கொங்கை மங்கையர் வேள்சஞ் சரீகநறை வந்துசுற் றுந்தொங்கல் வாணன்றென் மாறை வரையின்மலர்க கொந்துசுற் றுங்குழ லாய்செல்ல னீயக் குளிர்பொழிற்கே" எனவும், 2"யாஅங் கொன்ற மரஞ்சுட் டியவிற் கரும்புமருண் முதல பைந்தாட்செந்தினை மடப்பிடித் தடக்கை யன்ன பால்வார்பு கரிக்குறட் டிறைஞ்சிய செறிகோற் பைங்குரற் படுகிளி கடிகஞ் சேறு மடுபோர் எஃகுவிளங்கு தடக்கை மலையன் கானத் தார நாறு மார்பினை வாரற்க தில்ல வருகுவள் யாயே" எனவும் வரும். இறைமகள் ஆடிட நோக்கி அழிதற்குச் செய்யுள்: 3"அருவித் தடமு மணிமுத்த யாறு மவனியெங்குந் திருவித் தியதஞ்சை வாணன் சிலம்புமிச் சிற்றிலும்பேர் இருவிப் புனமுமின் றென்னினைக் கின்றன வென்னையின்னே மருவிப் பிரிபவர் போலில்லை யேமண்ணில் வன்கண்ணரே" எனவும், 4"அளிய தாமே செவ்வாய்ப் பைங்கிளி குன்றக் குறவர் கொய்தினைப் பைங்கால் இருவி நீள்புனங் கண்டும் பிரித றேற்றாப் பேரன் பினவே" எனவும் வரும். பாங்கி ஆடிடம் விடுத்துக்கொண் டகறற்குச் செய்யுள்: 5"உன்னை யராவல்கு னல்லவ ரோவென் றுசாவினெங்கண் மன்னைய ராமல் வகுத்துரை நீதஞ்சை வாணன்வெற்பி
1. த. கோ. செ: 157. 2. குறு. செ: 198. (இது குறுந்தொகையில் 'தோழி குறியிடம் பெயர்த்துக் கூறியது' எனக்கொள்ளப்பெற்றது) 3. த. கோ. செ: 158. 4. ஐங்குறு. செ: 284. 5. த. கோ. செ: 159.
|