142

னென்னைய ராணைகொண் டேகுகின் றேனிவை யித்தனையும்
பின்னைய ராதொழி வாயித ணேயிது பெற்றனமே"

எனவும்,

1"விரியிணர் வேங்கை வண்டுபடு கண்ணியன்
தெரியிதழ்க் குவளைத் தேம்பாய் தாரன்
அஞ்சிலை யிடவ தாக வெஞ்செலற்
கணைவலந் தெரிந்து துணைபடர்ந் துள்ளி
வருதல் வாய்வது வான்றோய் வெற்பன்
வந்தன னாயி னந்தளிர்ச் செயலைத்
தாழ்வி லோங்குசினைத் தொடுத்த வீழ்கயிற்
றூசன் மாறிய மருங்கும் பாய்புடன்
ஆடா மையிற் கலுழ்பில தேறி
நீடிதழ்த் தலைஇய கவின்பெறு நீலங்
கண்ணென மலர்ந்த சுனையும் வண்பறை 
மக்கிளி யெடுத்தல் செல்லாத் தடக்குரற் 
குலவுப்பொறை யிறுத்த கோற்றலை யிருவி
கொய்தொழி புனமு நோக்கி நெடிதுநினைந்து
பைதலன் பெயரலன் கொல்லோ வைதேய்
கயவெள் ளருவி சூடிய வுயர்வரைக்
கூஉங்கண் ணஃதெம் மூரென
வாங்கதை யறிவுறன் மறந்திசின் யானே"

எனவும் வரும்.

பின்னாள் நெடுந்தகை குறிவயின் நீடுசென் றிரங்கற்குச் செய்யுள்:

2"மான்கா ணிகரின் மடமயில் காடஞ்சை வாணன்வெற்பிற்
றேன்கா ணிரைமென் சிறைக்கிளை காளென் றெருமரனோய்
தான்கா ணியகொலிச் சந்தனச் சோலையைத் தன்னையின்றி
யான்கா ணியகொ லெழுந்தரு ளாததின் றென்னுயிரே"

எனவும்.

3"உள்ளிக் காண்பென் போல்வன் முள்ளெயிற்
றமிழ்த மூறுமஞ் செவ்வாய்க் கமழகில்
ஆர நாறு மறல்போற் கூந்தற்



1. அகம். செ: 38.

2. த. கோ. செ: 160.

3. குறு. செ: 286.