143

பேரமர் 1மழைக்கண் மடந்தை
மூரன் முறுவலொடு மதைஇய நோக்கே

எனவும் வரும்.

தலைமகன் வறுங்கள நாடி மறுகற்குச் செய்யுள்:

2"செங்கேழ் விழிக்கு மொழிக்கும் பகைதிருப் பாற்கடலும்
பங்கே ருகமும் பயந்தன வாயினும் பைங்கிள்ளைகாள்
சங்கேய் தடந்துறை சூழ்தஞ்சை வாணன் றரியலர்போல்
எங்கே யினித்தங்கு வாரேனல் காத்திங் கிருந்தவரே"

எனவும்,

"கள்ளாவி நாறுங் கமழ்கூந்தற் காரிகையென்
உள்ளாவி சென்ற வழியறியேன்-றள்ளாத
மல்ல லருவி மலைநாடி வாய்திறந்து
சொல்லல் புரியாய் துணிந்து"

எனவும் வரும்.

தலைமகன் தலைமகள் வாழும் ஊர்நோக்கி மதிமயங்கற்குச் செய்யுள்:

3"பெறவரி தாலவள் பின்சென்ற நெஞ்சமும் பேணலர்க்கு
மறவரி தானன்ன வாணன்றென் மாறை வரைப்புனஞ்சூழ்
நறவரி தாழ்முல்லை நாண்மல ரோதி நகருமெனக்
குறவரி தாமென்செய் வேனென்று சோருமென் னோருயிரே"

எனவும்,

4"ஆடமை புரையும் வனப்பிற் பணைத்தோட்
பேரமர்க் கண்ணி யிருந்த வூரே
நெடுஞ்சே ணாரிடை யதுவே நெஞ்சே
யீரம் பட்ட செவ்வீப் பைம்புனத்
தோரே ருழவன் போலப்
பெருவிதுப் புற்றன்றா னோகோ யானே"

எனவும் வரும்.

இவற்றுள், முன்னைய இரண்டும் விலக்கற்குரிய; பாங்கி ஆடிடம் விடுத்துக்கொண்டு அகறலாகிய ஒன்றும் சேறற்குரித்து; ஏனைய நான்கும் கலக்கத்திற்குரிய

(40)



1. (பாடம்) 'மழைக்கண் கொடிச்சி.'

2. த. கோ. செ: 161.

3. த. கோ. செ: 162.

4. குறு. செ: 131.