144

12. இரவுக்குறி

இரவுக்குறியின் வகை

157. வேண்டல் மறுத்தல் உடன்படல் கூட்டல்
கூடல்பா ராட்டல் பாங்கியிற் கூட்டல்
உயங்கல் நீங்கலென் றொன்பது வகைத்தே
இயம்பிப் போந்த இரவுக் குறியே.

(இ - ம்.) இரவுக்குறியின் வகை உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) வேண்டல் முதலாக நீங்கல் ஈறாக ஒன்பது வகைத்து மேற்சொல்லிப் போந்த இரவுக்குறி என்றவாறு.

(41)

இரவுக்குறியின் விரி

158. இறையோன் இருட்குறி வேண்டலும் பாங்கி
நெறியின தருமை கூறலும் இறையோன்
நெறியின தெளிமை கூறலும் பாங்கி
அவனாட் டணியியல் வினாதலும் கிழவோன்
அவணாட் டணியியயல் வினாதலும் அவற்குத்
தன்னாட் டணியியல் பாங்கி சாற்றலும்
இறைவிக் கிறையோன், குறையறி வுறுத்தலும்
நேரா திறைவி நெஞ்சொடு கிளத்தலும்
நேரிழை பாங்கி யொடுநேர்ந் துரைத்தலும்
நேர்ந்தமை பாங்கி நெடுந்தகைக் குரைத்தலும்
குறியிடை நிறீஇத் தாய்துயி லறிதலும்
இறைவிக் கிறைவன் வரவறி வுறுத்தலும்
அவட்கொண்டு சேறலுங் குறியுய்த் தகறலும்
வண்டுறை தாரோன் வந்தெதிர்ப் படுதலும்
பெருமகள் ஆற்றின தருமைநினைந் திரங்கலும்
புரவலன் தேற்றலும் புணர்தலும் புகழ்தலும்
இறைமகள் இறைவனைக் குறிவிலக் கலும்அவன்
இறைவியை இல்வயின் விடுத்தலும் இறைவியை