தலைமகன் நெறியினதெளிமை கூறற்குச் செய்யுள்: 1"வடுவரி நீள்கண்ணி யஞ்சலம் யாந்தஞ்சை வாணன்வெற்பிற் கொடுவரி கேழற் குழாம்பொரு கொல்லையுங் குஞ்சரந்தேர்ந் தடுவரி தாவு மடுக்கமுஞ் சூர்வழங் காறுமைவாய்க் கடுவரி நாகந் தவர்மல்கு கல்லளைக் கானமுமே." என வரும். பாங்கி அவனாட்டு அணியியல் வினாதற்குச் செய்யுள்: 2"பூந்தழை யாது மலைமலர் யாது புனையிழையுஞ் சாந்தமும் யாது தடம்பொழில் யாது தரணியின்மேல் மாந்தரில் வேளன்ன வாணன்றென் மாறைவளநகர்சூழ் தேந்தரு சோலைவெற் பாவுங்க ணாட்டுறை செல்வியர்க்கே" என வரும். தலைமகன் அவள் நாட்டணியியல் வினாதற்குச் செய்யுள்: 3"எந்நாட்டவரணி கூறியென் பேறிங் கிகல்வடிவேன் மைந்நாட்ட வெண்முத்த வாணகை யாய்தஞ்சை வாணன்மண்மேல் உந்நாட் டரிவைய ராடிடஞ் சாந்த மொளியிழைபூ மொய்ந்நாட் டழையொடெல் லாமொழி யாமன்மொழி யெனக்கே." என வரும். தலைமகற்குப் பாங்கி தன்னாட்டணியியல் சாற்றற்குச் செய்யுள்: 4"வகைகொண்ட மாந்தழை காந்தளம் போது மருப்பின்முத்தந் தகைகொண்ட சந்தனச் சாந்தணிந் தாடுவர் தஞ்சையர்கோன் மிகைகொண்ட தெவ்வரை வெந்கண்ட வாணன்வெற் பாவெமதூர் நகைகொண்ட வல்லியன் னாரெல்லி நாக நறுநிழலே." எனவும், 5"ஆம்ப லணித்தழை யாரந் துயல்வருந் தீம்புன லூரன் மகளிவ ளாய்ந்தநறுந் சேமலர் நீலம் பிணையல் செறிமலர்த் தாமரை தன்னையர் பூ." எனவும் வரும்.
1. த. கோ. செ: 165.
2. த. கோ. செ: 166. 3. த. கோ. செ: 167. 4. த. கோ. செ: 168. 5. திணைமொழி ஐம்பது, 40.
|