1"கொடுமுண் மடற்றாழைக் கூம்பவிழ்ந்த வொண்பூ விடையு ளிழுதொப்பத் தோன்றிப் - புடையெலாந் தெய்வங் கமழுந் தெளிகடற் றண்சேர்ப்பன் செய்தான் றெளியாக் குறி." எனவும் வரும். தலைமகன் புலந்து போதற்குச் செய்யுள்: 2"தேனுற்ற வாகையந் தார்த்தஞ்சை வாணனைச் சேரலர்போன் மானுற்ற பார்வை மயில்பொருட்டாக வழிதெரியாக் கானுற்ற கானற் சுனையிருள் வாய்வரக் கற்பித்தநீ யானுற்ற நோய்களெல் லாம்படு வாயினி யென்னெஞ்சமே." எனவும், 3"குணகடற் றிரையது பறைதபு நாரை திண்டேர்ப் பொரையன் றொண்டி முன்றுறை யயிரை யாரிரைக் கணவந் தாங்குச் சேய ளரியோட் படர்தி நோயை நெஞ்சே நோய்ப்பா லோயே."
எனவும் வரும். புலர்ந்தபின் வறுங்களந் தலைவி கண்டிரங்கற்குச் செய்யுள்: 4"தாதகை தண்டலை சூழ்தஞ்சை வாணன் றடந்துறைவாய் நீதகை கொண்டென்முன் னின்றனை யேசெந் நிறக்கனிவாய் மேதகு முள்ளெயிற் றொண்முகைக் கொங்கை வெண்டோட்டுமென்பூங் கேதகை யென்னுநல் லாய்கொண்கர் மாலை கிடைத்ததென்றே." என வரும். தலைமகள் பாங்கியோடு உரைத்தற்குச் செய்யுள்: 5"தேனே ரலங்கல் புனைபுகழ் வாணன் செழுந்தஞ்சைசூழ் கானேர் குறியிற் கனையிருள் வாய்வந்து காலுழத்தி யானே கியபின்பு தாம்வந்து போன தியம்புதற்கோ மானே யிறைவர்வைத் தார்பங்க சாதம் வலம்புரிக்கே." எனவும்,
1. ஐந்திணை ஐம்பது. செ: 49.
2. த. கோ. செ: 193. 3. குறு. செ: 128. 4. த. கோ. செ: 194. 5. த. கோ. செ: 195.
|