158

1"நெய்தற் படப்பை நிறைகழித்தண் சேர்ப்பன்
சைதைசூழ் கானலிற் கண்டநாட் போலானான்
செய்த குறியும்பொய் யாயினவாற் சேயிழா
யையகொ லான்றார் தொடர்பு."

எனவும் வரும்.

தலைமகள் அவலம் பாங்கி தணித்தற்குச் செய்யுள்:

2"பொய்யா தவர்தங் குறிபிழை யாரவர் பூண்டவன்பு
மெய்யாத றேறி யழுங்கன்மின் னேபுய வெற்பிரண்டான்
மையாழி வைய நிலையிட்ட வாணன்றென் மாறைவெற்பி
னுய்யான மென்கழு நீர்நறு மாலை யுடைத்தல்லவே."

என வரும்.

இறைவன்மேற் பாங்கி குறிபிழைப்பேற்றற்குச் செய்யுள்:

3"விம்மூர் துயர்க்கடல் வெள்ளத்துள் ளேயெம்மை வீழ்வித்துநீர்
எம்மூ ரகத்து வரலொழிந் தீரெதி ரேற்றதெவ்வர்
தம்மூரை முப்புர மாக்கிய வாணன் தமிழ்த் தஞ்சைபோல்
உம்மூர் வரத்துணிந் தோமன்பர் கூறுமவ் வூரெமக்கே."

எனவும்,

4"காமங் கடவ வுள்ள மினைப்ப
யாம்வந்து காண்பதோர் பருவ மாயின்
ஓங்கித் தோன்று முயர்வரைக்
கியாங்கெனப் படுவது நும்மூர் தெய்யோ."

எனவும் வரும்.

இறைவிமேல் இறைவன் குறிபிழைப்பேற்றற்குச் செய்யுள்:

5"துறந்தன ளாகியம் போருகந் தன்னையித் தொல்வரைமேற்
பிறந்தன ளாகும் பெருந்திரு மாதெனப் பேதையரிற்
சிறந்தன ளாதலிற் செந்தமிழ் வாணன்றென் மாறையன்னாள்
மறந்தன ளாயினும் யாமொரு போது மறவலமே."

எனவும்,

6"மழைவர வறியா மஞ்ஞை யாலும்
அடுக்க னல்லூ ரசைநடைக் கொடிச்சி



1. திணைமொழி ஐம்பது, செ : 41.

2. த. கோ. செ : 196.

3. த. கோ. செ : 197.

4. ஐங்குறு. செ : 237.

5. த. கோ. செ : 198.

6. ஐங்குறு. செ : 298.