159

தானெம் மருளா ளாயினும்
யாந்தன் னுள்ளுபு மறந்தறி யேமே."

எனவும் வரும்.

தலைமகள் குறிமருண்டமை தோழி தலைவற்குரைத்தற்குச் செய்யுள்:

1"தனையா வரும்புக ழத்தரும் வாணன் றமிழ்த்தஞ்சைமா
னனையா ளவள்குறி யாமிதென் றேநினைந் தல்லதொன்று
நினையா வருங்கங்கு னின்குறி யாவந்து நின்றதுநம்
வினையால் விளைந்ததென் றேவெறி தேயன்ப மீண்டனளே."

எனவும் வரும்.

தலைமகன் சொல்லிய கொடுமையைத் தலைமகட்குத் தோழி சொல்லியதற்குச் செய்யுள்:

2"பல்லியம் போலுரு மேறெங்கு மார்ப்பதும் பார்ப்பதின்றி
வல்லியம் போதகம் போர்பயில் கான்வந்து வாணன்றஞ்சை
யல்லியம் போருகை யன்னநின் கேளருளா சையினின்
றெல்லியம் போதுசென் றேனென்று கேள்வ ரியம்பினரே."

என வரும்.

என் பிழைப்பன்றென்று இறைவி நோதற்குச் செய்யுள்:

3"வியலூ ரெயிற்புற நொச்சியி னூழ்மலர் வீழ்தொறெண்ணி
மயலூர் மனத்தொடு வைகினன் யான்றஞ்சை வாணன்வெற்பர்
புயலூ ரிருட்கங்குல் வந்தவ மேநின்று போயினரென்
றயலூர் நகைக்குமென் னேயென்ன பாவங்கொ லாக்கினவே."

எனவும்,

4"கொன்னூர் துஞ்சினும் யாந்துஞ் சலமே
யெம்மி லயல தேழி லும்பர்
மயிலடி யிலைய மாக்குர னொச்சி
யணிமிகு மென்கொம் பூழ்த்த
மணியருள் பூவின் பாடுநனி கேட்டே."

எனவும் வரும்.

முன்னை ஞான்றும் நிகழ்ந்தவை அறிந்திருந்தும் மற்றை ஞான்று தலைமகள் இவ்வாறு சொல்லியாற்றுதல் காரணமாகவும், பாங்கி சொல்லி ஆற்றுவித்தல் காரணமாகவும் வந்தன.

(44)



1. த. கோ. செ : 199.

2. த. கோ. செ : 200.

3. த. கோ. செ : 201.

4. குறு. செ : 138.