161

ஊர் துஞ்சாமைக்குச் செய்யுள்:

1"ஓங்கண்ணல் வெம்பக டுந்திவந் தோரை யுடன்று தும்பைத்
தேங்கண்ணி சூடிச் செருவென்ற வாணன்றென் மாறைமின்னே
தாங்கண் ணனையர் தமைப்பிரிந் தோநந் தனிமைகண்டோ
நாங்கண் ணுறங்கினு மோவுறங் கார்கண் ணகரவரே."

எனவும்,

2"குறுங்கை யிரும்புலிக் கோள்வல் லேற்றை
பூநுத லிரும்பிடி புலம்பத் தாக்கித்
தாழ்நீர் நனந்தலைப் பெருங்களி றடூஉங்
கல்லக வெற்பன் சொல்லிற் றேறி
யாமெந் நலனிழந் தனமே யாமத்
தலர்வாய்ப் பெண்டி ரம்பலோ டொன்றிப்
புரைய றீமொழி பயிற்றிய வுரையெடுத்
தானாக் கௌவைத் தாகத்
தானென் னிழந்ததிவ் வழுங்க லூரே."

எனவும் வரும்.

காவலர் கடுகுதற்குச் செய்யுள்:

3"புயற்கண் ணியதலைப் பூகமென் பாளைப் புதுமதுநீர்
வயற்கண் ணிறைதஞ்சை வாணன்றென் மாறையில் வஞ்சியன்னாள்
கயற்கண் ணிணையஞ்சி நீர்மல்கக் காவலர் கைப்பறையின்
செயற்கண் ணிணையல்ல வோபடு கின்றன திண்கடிப்பே."

என வரும்.

நிலவு வெளிப்படுதற்குச் செய்யுள்:

4"தெண்பாற் கதிர்முத்த வெண்ணகை யாய்திகி ரிக்கிரிசூழ்
மண்பாற் புகழ்வைத்த வாணன்றென் மாறைநம் மன்னர் பொற்றேர்
பண்பாற் பரிக்கும் பரிவரு மாறென் பரந்தநிலா
வெண்பாற் கடலில்வை யம்பதி னாலு மிதக்கின்றவே."

எனவும்,

5"கருங்கால் வேங்கை வீயுகு துறுகல்
இரும்புலிக் குருளையிற் றோன்றுங் காட்டிடை



1. த. கோ. செ : 204.

2. நற்றிணை, செ : 36.

3. த. கோ. செ : 205.

4. த. கோ. செ : 206.

5. குறு. செ : 47.