யெல்லி வருநர் களவிற்கு நல்லை யல்லை நெடுவெண் ணிலவே." எனவும் வரும். கூகை குழறுதற்குச் செய்யுள்: 1"நம்பே றுடைமை யிருக்கின்ற வாகடன் ஞாலத்துள்ளோர் தம்பே றெனவந்த சந்திர வாணன் றரியலர்போல் வம்பேறு கொங்கை மயிலிய னாமஞ்ச மன்றமராங் கொம்பேறி நள்ளிருள் வாய்க்குழ றாநின்ற கூகைகளே." எனவும், 2"எம்மூர் வாயி லொண்டுறைத் தடைஇய கடவுண் முதுமரத் துடனுறைவு பழகிய தேயா வளைவாய்த் தெண்கட் கூருகிர் வாய்ப்பறை யசாஅம் வலிமுந்து கூகை மையூன் றெரிந்த நெய்வெண் புழுக்கல் எலிவான் சூட்டொடு மலியப் பேணுதும் எஞ்சாக் கொள்கையெங் காதலர் வரனசைஇத் துஞ்சா தலமரு பொழுதில் அஞ்சுவரக் கடுங்குரல் பயிற்றா தீமே." எனவும் வரும். தோழி குரற்காட்டுதற்குச் செய்யுள்: 3"மன்பதை யுய்ய வருந்தஞ்சை வாணன்றென் மாறைவெற்பர் கொன்பதி வேல்வலங் கொண்டுவந் தாற்றங்கள் கோனடந்தான் என்பது தேறி யிடையிரு ளூரை யெழுப்பும் வெம்முள் பொன்பதி தாள்வளை வாய்ச்செய்ய சூட்டுவன் புள்ளினமே." எனவும், "கள்வ ரைக்கண் காட்டுவர் போலக் கொள்ளுங் குரல்கூவுங் கோழி." எனவும் வரும். இவை ஏழும் வரைவு கடாதற்கும் உரியவாம். (45)
1. த. கோ. செ :207.
2. நற்றிணை, செ : 83. 3. த. கோ. செ :208.
|