இரவுக்குறி இடையீட்டின் விரி இவை எனல் 162. திரட்டியிவ் வாறு செப்பிய வொன்பதிற் றிரட்டியு மிரவுக்குறி யிடையீட்டு விரியே. (இ-ள்.) கூட்டி யிப்படியாற் சொல்லப்பட்ட பதினெட்டும் இரவுக்குறியிடையீட்டு விரியாம் என்றவாறு. (46)
14. வரைதல் வேட்கை வரைதல் வேட்கையின் வகை 163. அச்ச முவர்த்த லாற்றா மையென மெச்சிய வரைதல் வேட்கைமூ வகைத்தே. (இ-ள்.) அச்சமும் உவர்த்தலும் ஆற்றாமையும் என மூன்று வகையினை உடைத்தாம் விதிக்கப்பட்டுள்ள வரைதல் வேட்கை என்றவாறு. (47) வரைதல் வேட்கையின் விரி 164. பருவரல் வினவிய பாங்கிக் கிறைவி அருமறை செவிலி அறிந்தமை கூறலும் தலைமகன் வருந்தொழிற் கருமை சாற்றலும் தலைமக னூர்க்குச் செலவொருப் படுதலும் பாங்கி யிறைவனைப் பழித்தலும் பூங்கொடி இறையோன் றன்னைநொந் தியற்பட மொழிதலும் கனவுநலி புரைத்தலும் கவினழி வுரைத்தலும் தன்றுயர் தலைமகற் குரைத்தல் வேண்டலும் துன்புறல் பாங்கி சொல்லெனச் சொல்லலும் அலர்பார்த் துற்ற வச்சக் கிளவியும் ஆறுபார்த் துற்ற வச்சக் கிளவியுங் காம மிக்க கழிபடர் கிளவியும் தன்னுட் கையா றெய்திடு கிளவியும் நெறிவிலக்கு வித்தலும் குறிவிலக்கு வித்தலும் வெறிவிலக்கு வித்தலும் பிறவிலக்கு வித்தலும் குரவரை வரைவெதிர் கொள்ளுவித் தலுமென
|