வுரைபெற வகுத்த வொன்பதிற் றிரட்டியும் வரைதல் வேட்கை விரியெனப் படுமே. (இ-ள்.) பருவரல் வினவிய பாங்கிக்கு இறைவி அருமறை செவிலி அறிந்தமை கூறல்முதலாகக் குரவரை வரைவெதிர் கொள்ளுவித்தல் ஈறாகச் சொற்பெற வகுத்த பதினெட்டும் வரைதல் வேட்கை விரியாம் என்றவாறு. அவற்றுள், தலைமகளைப் பாங்கி பருவரல் வினவுதற்குச் செய்யுள்: 1"விண்டார் பதிகொண்ட வேற்படை வாணன் விரைகமழ்பூந் தண்டா மரைமங்கை தங்கிய தஞ்சைநின் றாயர்தம்மோ டுண்டா கியமுனி வோவன்றி யாயத்தொ டுற்றதுண்டோ வண்டார் குழலிசொல் லாய்செல்ல லேதுன் மனத்திடையே." என வரும். தலைமகள் அருமறை செவிலியறிந்தமை கூறற்குச் செய்யுள்: 2"மாணிக்க மென்கொம்ப ரென்சொல்லு கேன்றஞ்சை | வாணன்வெற்பர் | பேணிப் புணர்ந்து பிரிந்தபின் றோன்றலும் | பேதைமுகம் | பாணித்த லின்றி மதிகண்டு நாணிய | பங்கயம் போல் | நாணிக் கவிழ்ந்தத னாலறிந் தாளன்னை | நங்களவே." |
3"யாங்கா குவமோ வணிநுதற் குறுமகள் தேம்படு சாரற் சிறுதினைப் பெருங்குரல் செவ்வாய்ப் பைங்கிளி கவர நீமற் றெவ்வாய்ச் சென்றனை யவணெனக் கூறி யன்னை யானாள் கழற முன்னின் றருவி யார்க்கும் பெருவரை நாடனை யறியலு மறியேன் காண்டலு மிலனே வெதிர்புனை தட்டையேன் மலர்பூக் கொய்து சுனைபாய்ந் தாடிற்று மிலனென நினைவிலை பொய்ய லந்தோ வாய்த்தனை யதுகேட்டுத்
1. த. கோ. செ :209. 2. த. கோ. செ :210. 3. நற்றிணை, செ :147.
|