165

தலையிறைஞ் சினளே யன்னை
செலவொழிந் தனையா லளியைநீ புனத்தே."

எனவும் வரும்.

தலைமகள் தலைமகன் வருந்தொழிற்கருமை சாற்றற்குச் செய்யுள்:

1"ஓவலில் வாயன்னை ஞாளியிவ் வூர்கண் ணுறங்கினுமூர்க்
காவலர் காய்வர் நிலாமதி காலுங் கடுங்குடிஞைச்
சேவலும் வாரண முந்தஞ்சை வாணனைச் சென்றிறைஞ்சா
மேவலர் போல்வெய்ய வாயடை யாவென் மெலிவறிந்தே."

எனவும்,

2"இரும்பிழி மகா அரிவ் வழுங்கன் மூதூர்
விழவின் றாயினுந் துஞ்சா தாகும்
மல்ல லாவணம் மறுகுடன் மடியின்
வல்லுரைக் கடுஞ்சொ லன்னை துஞ்சாள்
பிணிகோ ளருஞ்சிறை யன்னை துஞ்சிற்
றுஞ்சாக் கண்ணர் காவலர் கடுகுவர்
இலங்குவே லிளைஞர் துஞ்சின் வையெயிற்று
வலஞ்சுரித் தோகை ஞாளி மகிழும்
அரவவாய் ஞமலி குரையாது மடியிற்
பகலுறழ் நிலவுக் கான்று விசும்பின்
அகல்வாய் மண்டிலம் நின்றுவிரி யும்மே
திங்கள் கல்சேர்பு கனையிருள் மடியின்
இல்லெலி வல்சி வல்வாய்க் கூகை
கழுதுவழங் கியாமத் தழிதகக் குழறும்
வளைக்கட் சேவல் வாளாது மடியின்
மனைச்செறி கோழி மாண்குர லியம்பும்
எல்லா மடிந்த காலை யொருநாள்
நில்லா நெஞ்சத் தவர்வா ரலரே, அதனால்
அரிபெய் புட்டி லார்ப்பப் பரிசிறந்
தாதி போகிய பாய்பரி நன்மான்
நொச்சி வேலித் தித்த னுறந்தைக்
கன்முதிர் புறங்காட் டன்ன
பன்முட் டின்றாற் றோழிநங் களவே."

எனவும் வரும்.

தலைமகன் ஊர்க்குச் செலவொருப்படுதற்குச் செய்யுள்:

3"நம்பா னலனுண்ட நம்பா தகர்தந் நகர்வினவித்
தம்பா லுடன்சென்று சார்குவ மோதரி யாரைவென்று



1. த. கோ. செ :211.

2. அகம். செ : 122.

3. த. கோ. செ : 212.