வம்பார் கழல்புனை வாணன்றென் மாறை வளரும்வஞ்சிக் கொம்பா கியமருங் குற்கரும் பாமொழிக் கோமளமே." எனவும், 1"படுதிரை கொழீஇய பானிற வெக்கர்த் தொடியோர் மடிந்தெனத் துறைபுலம் பின்றே முடிவலை முகந்த முடங்கிறாப் 2பாவைப் படுபுள் ளோப்பலிற் 3பகன்மாய்ந் தன்றே கோட்டுமீ னெறிந்த வுவகையர் வேட்டமடிந் தெமரு மல்கின ரேமார்ந் தனமெனச் சென்றுநா மறியி னெவனோ தோழி மன்றப் புன்னை மாச்சினை நறுவீ முன்றிற் றாழையொடு கமழுந் தெண்கடற் சேர்ப்பன்வாழ் சிறுநல் லூர்க்கே." எனவும் வரும். பாங்கி இறைவனைப் பழித்தற்குச் செய்யுள்:
4"வறியார் புகழ்தஞ்சை வாணன்றென் மாறை மடந்தையன்னாள் அறியா டுயர்முன் னறிந்தவர் தாமத னாலழலின் பொறியா ருயிர்வெம் பணிமா மணியும் புதையிருள்கூர் நெறியா ரருள்பெற நாநடு நாளிடை நீந்துதுமே," எனவும், 5"ஈயற் புற்றத் தீர்ம்புறத் திறுத்த குறும்பி வல்சிப் பெருங்கை யேற்றை தூங்குதோற் றுதிய வள்ளுகிர் கதுவலிற் பாம்புமத னழியும் பானாட் கங்குலும் அரிய வல்லம னிகுளை பெரிய கேழ லட்ட பேழ்வா யேற்றை பலாவழ லடுக்கம் புலர வீர்க்குங் கழைநரல் சிலம்பி னாங்கண் வழையொடு வாழை யோங்கிய தாழ்கண் ணசும்பிற் படுகடுங் களிற்றின் வருத்தஞ் சொலிய பிடிபடி முறுக்கிய பெருமரப் பூசல் விண்டோய் விடரகத் தியம்பு மவர்நாட் டெண்ணரும் பிறங்கன் மானதர் மயங்காது.
1. நற்றிணை, செ : 49.
2. (பாடம்) 'படப்பைப்.' 3. (பாடம்) 'பாக்கமும் வறிதே.' 4. த. கோ. செ : 213, 5. அகம். செ : 8.
|