மின்னுவிடச் சிறிய வொதுங்கி மென்மெலத் துளிதலைத் தலைஇய மணியே ரைம்பால் சிறுபுறம் புதைய வாரிக் குரல்பிழியூஉ நெறிகெட விலங்கிய நீயி ரிச்சுரம் அறிதலு மறிதிரோ வென்னுநர்ப் பெறினே." எனவும் வரும். தலைமகன் இயற்பட மொழிதற்குச் செய்யுள்: 1"புணரா விரகமும் போகா விரவும் புணர்முலைமேல் இணரார் பசப்பும் பிறவுமெல் லாமிருள் கூர்ந்தறல்போல் வணரார் குழற்பிறை வாணுத லாய்தஞ்சை வாணன்வெற்பர் உணரா திருப்பது வேறொன்று மல்லநம் மூழ் வினையே." எனவும், "இப்பியீன் றுகுத்த நித்திலம் இருளற விமைக்கு மல்கிருந் துறைவன் அருளா துறைவா னாகவும் இறையிறந் தனவாற் றோழியென் வளையே." எனவும் வரும். தலைமகள் கனவு நலிபுரைத்தற்குச் செய்யுள்: 2"சினவாகை சூடிச் செருவென்ற வாணன்றென் மாறையினம் மனவாழ் மனையவர் வந்துநல் லியாம மணந்ததெல்லாம் நனவா மெனவே மகிழ்ந்தே விழித்தொன்று நான் கண்டிலேன் கனவாய் முடிந்தது பின்னையென் னேயென்ன கைதவமே." எனவும், "கேட்டிசின் வாழி தோழி யல்கற் பொய்வ லாளன் மெய்யுறன் 3மரீஇய 4வாய்த்தகைப் பொய்க்கனா மருட்ட வேற்றெழுந் தமளி தைவந் தனனே குவளை வண்டுபடு மலரிற் சாஅய்த் தமியேன் மன்ற வளியேன் யானே." எனவும் வரும்.
1. த. கோ. செ : 214.
2. த. கோ. செ : 215. இப்பாடலுக்குமாறாகத் தஞ்சைவாணன் கோவையில் 'இல்லாவருந் துயில்' என்ற பாட்டு இருக்கிறது. 3. குறு. செ :109. 4. (பாடம்) 'மரீஇ' 5. (பாடம்) 'வாய்த்தரு'
|