தலைமகள் கவினழிபுரைத்தற்குச் செய்யுள்: 1"வர்ளினு நீள்விழி வாணுத லாய்தஞ்சை வாணன்றெவ்வி னாளினு நாளு நலந்தொலை வேனகை யாரயில்வேல் வேளினு மேர்நல்ல வெற்பனு நீயுமென் மேனியினுந் தோளினு நோயறி யீரறி யாதென் றொல்வினையே." எனவும், 2"முடக்கா லிறவின் முடங்குபுறப் பெருங்கிளை புணரி யிகுதிரை தரூஉந் துறைவன் புணரிய விருந்து ஞான்றும் இன்னது மன்னோ நன்னுதற் கவினே." எனவும் வரும். தலைமகள் தன்றுயர் தலைமகற்குரைத்தல் வேண்டற்குச் செய்யுள்: 3"வரைப்பான் மதுரத் தமிழ்தெரி வாணன்றென் மாறைவையை நுரைப்பான் முகந்தன்ன நுண்டுகி லாயிந்த நோயவர்க்கின் றுரைப்பா ருளரே லுயிரெய்த லாநமக் கூர்திரைசூழ் தரைப்பால் வளரும் புகழெய்த லாமவர் தங்களுக்கே." எனவும், 4"புள்ளும் புலம்பின பூவுங் கூம்பின கானலும் புலம்புநனி யுடைத்தே வானமும் நம்மே போலு மம்மர்த் தாகி யெல்லை கழியப் புல்லென் றன்றே யின்னு முளெனே தோழி யிந்நிலை தண்ணிய கமழும் ஞாழல் தண்ணந் துறைவர்க் குரைக்குநர்ப் பெறினே." எனவும் வரும். பாங்கி நின்குறை நீயே சொல்லெனத் தலைமகட்குச் சொல்லற்குச் செய்யுள்: 5"ஒல்லென வேயென் னுறுதுயர் தாமு முணரும்வண்ணஞ் சொல்லென நீயிது சொல்லியென் பேறுன் றுயரமெல்லாம் வல்லென வேகொண்ட கொங்கையர் வேடஞ்சை வாணன் வெற்பில் அல்லென வார்குழ லாயறி யாரல்ல ரன்பருமே."
1. த. கோ. செ :216.
2. குறு. செ :109. 3. த. கோ. செ :217. 4. குறு. செ :310. 5. த. கோ. செ :218.
|