169

"ஊருறு கோழிச் சிறுமாப் பேடை
சேவற் செய்குறி நீடின்
ஊடலு முணர்த்தலுங் கூடுமாற் பெரிதே."

எனவும் வரும்.

தலைமகள் அலர்பார்த்துற்ற அச்சக்கிளவிக்குச் செய்யுள்:

1"மலருந் தொடைவஞ்சி வஞ்சக மாதரு மாரனும்வா
யலருந் தடங்கை யலருந் தொடாநிற்ப வஞ்சிநெஞ்சம்
பலரும் புகழ்தஞ்சை வாணர் பிரானைப் பணியலர்போற்
புலரும் பெயருங்கண் ணீர்புல ராது புலரினுமே."

எனவும்,

"அலரியாங் கொல்லதோ."

எனவும் வரும்.

தலைமகள் ஆறுபார்த்துற்ற அச்சக் கிளவிக்குச் செய்யுள்:

2"அரியுங் கரியும் பொருநெறிக் கோர்துணை யாயவர்மேற்
சொரியும் திவலை துடைக்கவென் றோகுழை தோய்ந்துநஞ்சும்
வரியும் பயில்கண்ணி வாணன்றென் மாறைநம் மன்னர்வந்து
பிரியும் பொழுதெல்லி வாய்வினை யேன்மனம் பின்செல்வதே."

எனவும்,

3"குன்றக் கூகை குழறினு முன்றிற்
பலவி னிருஞ்சினைக் கலைபாய்ந் துகளினும்
அஞ்சும னளித்தெ னெஞ்ச மினியே
ஆரிருட் கங்கு லவர்வரிற்
சார னீளிடைச் செலவா னாதே."

எனவும் வரும்.

காமமிக்க கழிபடர் கிளவிக்குச் செய்யுள்:

4"ஓதக் கயலையுண் டண்ணாந்து விக்கி யுடல்குலுக்கிப்
பாதத் துணைநிமிர்க் குங்குரு கீர்வெண் பணிலபங்க
சாதத் திருநிதி யன்னான் குலோத்துங்கன் தஞ்சையிலென்
காதற் சிறையுங் குறையுங்கண் டாரில்லைக் கன்னெஞ்சரே."

எனவும்,



1. த. கோ. செ : 219.

2. த. கோ. செ : 220.

3. குறு. செ : 153.

4. த. கோ. செ :