1"புன்கண்கூர் மாலைப் புலம்புமென் கண்ணேபோல் துன்பம் உழவாய் துயிலப் பெறுதியால் இன்கள்வாய் நெய்தால்நீ யெய்துங் கனவினுள் வன்கணார் கானல் வரக்கண் டறிதியோ." எனவும் வரும். தன்னுட் கையாறெய்திடு கிளவிக்குச் செய்யுள்: 2"விண்டலை யாவர்க்கும் வேந்தர்வண் டில்லைமெல் லங்கழிசூழ் கண்டலை யேகரி யாக்கன்னிப் புன்னைக் கலந்தகள்வர்க் கண்டிலை யேவரக் கங்குலெல் லாமங்குல் வாய்விளக்கும் மண்டல மேபணி யாய்தமி யேற்கொரு வாசகமே." என வரும். தலைமகள் நெறிவிலக்குவித்தற்குச் செய்யுள்: 3"ஈன்றா ளினுமெனக் கன்புடையாய்சென் றிரந்துகொண்டு சான்றாண்மை யன்பர் தமக்குரை நீதஞ்சை காவலனைத் தேன்றாழ் வரைத்தமிழ் சேர்த்திய வாணனைச் சேரலர்க்குந் தோன்றா விருங்கங்கு னீவரு மாறொழி தோன்றலென்றே." எனவும், 4"குறையொன் றுடையேன்மற் றோழி நிறையில்லா மன்னுயிர்க் கேமஞ் செயல்வேண்டு மின்னே யராவழங்கு நீள்சோலை நாடனை நம்மில் இராவார லென்ப துரை." எனவும் வரும். தலைமகள் குறிவிலக்குவித்தற்குச் செய்யுள்: 5"வெற்றி யவாவிய வாணர் பிரான்றஞ்சை வெற்பகத்திப் பெற்றிய சோலைப் பிறங்கிருள் வாரன்மின் பேதையின்னும் முற்றிய வேனற் படுகிள்ளை யோப்பு முறைமையளென் றெற்றிய காதலி னாலிசைத் தாளன்னை யென்றுரையே." எனவும்,
1. சிலப். கானல்வரி, 38.
2. திருச்சிற்றம்பலக் கோவையார், செ : 177. 3. கோ. செ : 223. 4. ஐந்திணை எழுபது, செ : 14, 5. த. கோ. செ : 224.
|