172

மீன்வலை மாப்பட் டாஅங்
கிதுமற் றெவனோ நொதுமலர் தலையே."

எனவும் வரும்.

குரவரை வரைவெதிர்கொள்ளுவித்தற்குச்செய்யுள்:

1"தற்பழி யாமலுஞ் சந்திர வாணன் தமிழ்த்தஞ்சைநங்
கற்பழி யாமலுங் காரண மாகக் கயல்விழிநின்
சொற்பழி யார்நமர் சொல்லுவல் லேசென்று சொல்லலையேல்
இற்பழி யாம்வழி யாநம தாருயிர்க் கேதமுமே."

எனவும்,

2"...........எந்தையும்
யாயு மறிய வுரைத்தீயின் யானுற்ற
நோயுங் களைகுவை மன்."

எனவும் வரும்.

பருவரல் வினவிய பாங்கிக் கிறைவி யருமறை செவிலியறிந்தமை கூறலும், தலைமகன் வருந்தொழிற் கருமை சாற்றலும் ஆக இரண்டும், அலர்பார்த்துற்ற அச்சக்கிளவியும் ஆறுபார்த்துற்றவச்சக்கிளவியும் ஆகவிரண்டும் நெறிவிலக்குவித்தல் முதலிய நான்குமாகிய எட்டும் அச்சத்திற்குரியன; பாங்கி இறைவனைப் பழித்தலும் துன்புறு பாங்கி சொல்லெனச் சொல்லலுமாகிய இரண்டும், உவர்த்தற்குரியன; தலைமகனூர்க்குச் செலவொருப்படுதலும், பூங்கொடி இறையோன்றன்னை நொந்தியற்பட மொழிதலும், கனவு நலிரைத்தலும், கவினழி புரைத்தலும், தன்றுயர் தலைவர்க்குணர்த்தல் வேண்டலும், காமமிக்க கழிபடர் கிளவியும் தன்னுட் கையாறெய்திடு கிளவியும், குரவரை வரைவெதிர் கொள்ளுவித லுமாகிய எட்டும் ஆற்றாமைக் குரியன.

(48)

15. வரைவு கடாதல்

வரைவு கடாதலின் வகை

165. பொய்த்தல் மறுத்தல் கழறல் மெய்த்தலென்
றொருநால் வகைத்தே வரைவு கடாதல்.

(இ - ள்.) பொய்த்தல் முதலாக மெய்த்தல் ஈறாக நான்கு வகையினை யுடைத்து வரைவுகடாதல் என்றவாறு.

(49)



1. த. கோ. செ : 227.

2. கலி முல்லை. செ : 11.