1"வேரல் வேலி வேர்க்கோட் பலவின் சாரனாட செவ்வியை யாகுமதி யாரஃ தறிந்திசி னோரே சாரற் சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கிவள் உயிர்தவச சிறிது காமமோ பெரிதே." எனவும் வரும். கனவு நலிபுரைத்தற்குச் செய்யுள்: 2"மாணாத தெவ்வென்ற வாணன்றென் மாறை வளநகர்போற் பூணாக மெல்லியற் புல்லினை யாகவப் பொய்யைமெய்யாப் பேணா மகிழ்ந்து பெருந்துயி லேற்றவள் பின்னைநின்னைக் காணாள் கலங்கின ளாற்கலங் காமனக் காவலனே." எனவும், 3"மின்னவிர் வயங்கிழை ஞெகிழச் சாஅய் நன்னுதல் பசத்தல் யாவது துன்னிக் கனவிற் காணு மிவளே நனவிற் காணாணின் மார்பே தெய்யோ." எனவும் வரும். கவினழி புரைத்தற்குச் செய்யுள்: 4"ஏரேற்ற கொங்கை யிளங்கொடி மாந்தளி ரேய்ந்தவண்ணங் காரேற்ற கங்குலிற் பீரலர் போன்றது காவியுண்கண் வாரேற்ற பைங்கழல் வாணன்றென் மாறையில் வாவியின்கண் நீரேற்ற செங்கழு நீர்மலர் போன்றது நின்பொருட்டே." எனவும், 5"தொடிபழி மறைத்தலிற் றோளுய்ந் தனவே வடிக்கொள் கூழை யாயமோ டாடலி னிடிப்பு மெய்யதொன் றுடைத்தே கடிக்கொள அன்னை காக்குந் தொன்னலஞ் சிதையக் காண்டொறுங் கலுழ்த லன்றியு மீண்டுநீர் முத்துப்படு பரப்பிற் கொற்கை முன்றுறைச் சிறுபா சடைய செப்பூர் நெய்தற் றெண்ணீர் மலரிற் றொலைந்த கண்ணே காமங் கரப்பரி யவ்வே."
எனவும் வரும்.
1. குறு. செ : 18.
2. த. கோ. செ : 246. 3. ஐங்குறு. செ : 234. 4. த. கோ. செ : 247. 5. நற்றிணை, செ : 23.
|