184

தலைமகனைப் பாங்கி விடுத்தற்குச் செய்யுள்:

1"இல்லத் துறையு மிவள்பொருட் டானுமக் கியானுமொன்று
சொல்லத் தவிர்கிலன் சூழ்கழ லீர்சுடர் தோய்புரிசை
வல்லத் தமர்வென்ற வாணன்றென் மாறையில் வந்துவந்து
செல்லத் திருவுளம் வைத்தகல் வீர்நுந் திருநகர்க்கே."

என வரும்.

பாங்கி தலைவிக்கு அவன் செலவுணர்த்தற்குச்செய்யுள்:

2"நிலவேய் தரள நிரைத்தன்ன வாணகை நீலநிறக்
குலவேய் நிகர்பொற் றொடிநெடுந் தோளி குறுகிவரச்
செலவே கருதினர் செந்தமிழ் வாணன் செழுங்கமலத்
தலவே தியன்பெறு நாள்பெற்று வாழ்பவன் தஞ்சையிலே."

எனவும்,

3"சாரற் பலவின் கொழுந்துணர் நறும்பழ
மிருங்கல் விடரளை வீழ்ந்தென வெற்பிற்
பெருந்தே னிறாஅல் கீறு நாடன்
பேரமர் மழைக்கண் கலிழத்தன்
சீருடை நன்னாட்டுச் செல்லு மன்னாய்."

எனவும் வரும்.

தலைவி நெஞ்சொடு புலத்தற்குச் செய்யுள்:

4"குளித்தா ரிளங்கொங்கை யாவியி லாவி குளிர்ப்பநம்மை
யளித்தா ரகலத் தணைத்தகன் றாரன் றணங்கின்முன்னே
தெளித்தார் செழுந்தஞ்சை வாணனொன் னாரினஞ் சிந்தைநைய
வொளித்தா ரவரிங்ங னேநன்று நன்றிவ் வுலகியலே."

எனவும்,

5"அளித்தஞ்ச லென்றவர் நீப்பிற் றெளித்தசொல்
தேறியார்க் குண்டோ தவறு."

எனவும் வரும்.

சென்றோன் நீடலிற் காமமிக்க கழிபடர்கிளவிக்குச் செய்யுள்:

6"மயிலாடு தண்டலை மாறை வரோதயன் வாணனொன்னார்க்
கெயிலா கியகடற் கானலஞ் சேர்ப்பற் கிடையிருள்யான்



1. த. கோ. செ : 251.

2. த. கோ. செ : 252.

3. த. கோ. செ : 254.

4. ஐங்குறு, செ : 214.

5. த. கோ. செ : 253.$ (பாடம்) 'அளித்தாலளித்தக லத்தணைத்தாரன்.'

6. திருக்குறள் செ : 1154.