றுயிலா நிலையொன்றுஞ் சொல்லாய் துணையுடன் சூழ்திரைத்தேன் பயிலா மலரணை மேற்றுயி லாநிற்றி பாலன்னமே," எனவும், 1"சிறுவெள்ளாங் குருகே சிறுவெள்ளாங் குருகே துறைபோ கறுவைத் தூமடி யன்ன நிறங்கிளர் தூவிச் சிறுவெள்ளாங் குருகே யெம்மூர் வந்தெம் மொண்டுறைத் துழைஇச் சினக்கெளிற் றார்கையை யவரூர்ப் பெயர்தி யனையவன் பினையோ பெருமற வியையோ ஆங்கட் டீம்புன லீங்கட் பரக்கும் கழனி நல்லூர் மகிழ்நர்க்கென் இழைநெகிழ் பருவரல் செப்பா தோயே." எனவும் வரும். தலைவியைப் பாங்கி ஆற்றுவித்தற்குச் செய்யுள்: 2"ஆடுகம் வாநம் மகன்ற வரூரக லாப்புதுநீர் பாடுகம் வாபொற் பசலைதந் தார்திறம் பாங்கினெல் லாந் தேடுகம் வாதஞ்சை வாணனன் னாட்டன்பர் தேர்வழிநாஞ் சூடுகம் வாகவ லாதவர் கானற் றுறைமலரே," எனவும், 3"கானலம் பெருந்துறைக் கலிதிரை திளைக்கும் வானுயர் நெடுமண லேறி யானாது காண்கம் வம்மோ தோழி செறிவளை நெகிழ்த்தோ னெறிகட னாடே," எனவும் வரும். பாங்கி தலைமகட்குத் தலைமகன் வந்தமை உணர்த்தற்குச் செய்யுள்: 4"பண்ணுங் குழலும் பழித்தசொற் பாவை பரியலெல்லா மண்ணும் புகழ்தஞ்சை வாணனொன் னாரென மைக்குவளைக் கண்ணுங் கனையிருட் கங்குலு மாரன் கணைகள் பட்ட புண்ணும் புலரவந் தார்தம தூர்வயிற் போனவரே." எனவும்,
1. நற்றிணை, செ : 70.
2. த. கோ. செ : 255. 3. ஐங்குறு, செ : 199. 4. த. கோ. செ : 256.
|