1"அம்ம வாழி தோழி நம்மலை நறுந்தண் சிலம்பி னாறுகுலைக் காந்தட் கொங்குண் வண்டிற் பெயர்ந்துபுற மாறிநின் வன்புடை விறற்கவின் கொண்ட வன்பி லாளன் வந்தன னினியே." எனவும் வரும். வந்தோன் றன்னொடு பாங்கி நொந்து வினாதற்குச் செய்யுள்: 2"ஒருதலைக் கெய்திய கல்லதர்க் குச்செல்ல வோருயிர்த்தா யிருதலைப் புள்ளி னியைந்த நுங் கேண்மையை யெண்ணியெம்மூர் வருதலைக் கொண்க நினைந்தில வாணன்றென் மாறைவண்டு பொருதலைக் குங்குழ லாளழ நீகண்டு போயபின்னே." எனவும், 3"யாங்குவல் லுநையோ வோங்கல் வெற்ப விரும்பல் கூந்தற் றிருந்திழை யரிவை திதலை மாமை தேயப் பசலை பாயப் பிரிவு தெய்யோ." எனவும் வரும். தலைவன் பாங்கியொடு நொந்துவினாதற்குச் செய்யுள்: 4"ஐவா யரவுற்ற தன்னவின் னாவிட ராற்றியென்போல் எவ்வா றிருந்திர்நீ ரெல்வளை யீரெதிர்ந் தாரைவென்று மைவா ரணங்கொண்ட வாணன்றென் மாறை மருவலர்போல் ஒவ்வா வலரையுங் கேட்டிரு வீரு மொருதனியே," என வரும். பாங்கி தலைவியை ஆற்றுவித்திருந்த அருமை தலைமகற்குச் சொல்லற்குச் செய்யுள்: 5"இவளா ருயிர்புரந் தியானிருந் தேன்செக்க ரிந்துவன்னப் பவளா டவியிற் பயினித் திலம்பங்க யங்குவியத் தவளா தவஞ்சொரி தண்டுறை வாதஞ்சை வாணன்றெவ்வின் றுவளா மலாற்றுவி யென்றன்று நீசொன்ன சொன்னினைந்தே," எனவும்,
1. ஐங்குறு, செ :226.
2. த. கோ. செ : 257. 3. ஐங்குறு. செ :231. 4. த. கோ. செ : 258. 5. த. கோ. செ :259.
|