188

வரைவிடைவைத்துப் பொருள்வயிற் பிரிதலின் விரி

170. என்பொருட் பிரிவுணர்த் தேந்திழைக் கென்றலும்
நின்பொருட் பிரிவுரை நீயவட் கென்றலும்
நீடே னென்றவ னீங்கலும் பாங்கி
ஓடரிக்  கண்ணிக் கவன்செல வுணர்த்தலும்
பூங்குழை யிரங்கலும் பாங்கி கொடுஞ்சொற்
சொல்லலும் தலைவி கொடுஞ்சொற் சொல்லலும்
வருகுவர் மீண்டெனப் பாங்கி வலித்தலும்
பருவங் கண்டு பெருமகள் புலம்பலும்
இகுளைவம் பென்றலும் இறைமகள் மறுத்தலும்
அவர்தூ தாகிவந் தடைந்ததிப் பொழுதெனத்
துணைவி சாற்றலும் பிணைவிழி ஆற்றலும்
அவனவண் புலம்பலும் அவன்வருங் காலைப்
பாகன் றன்னோடும் மேகந் தன்னொடும்
சோகங் கொண்டவன் சொல்லலும் பாங்கி
வலம்புரி கேட்டவன் வரவறி வுறுத்தலும்
வலம்புரி கிழத்தி வாழ்த்தலும் வந்துழி
நினைத்தமை வினாதலும் நினைத்தமை செப்பலும்
அனைத்தகை அவளை ஆற்றுவித் திருந்தமை
பாங்கிகூ றலுமென வாங்கெழு மூன்றும்
வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிவின்
விரியென விளம்பினர் தெரிமொழிப் புலவர்.

(இ - ம்.) வரைவிடைவைத்துப் பொருள்வயிற் பிரிவின் விரியாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) என்பொருட் பிரிவுணர்த் தேந்திழைக்கென்றல் முதலாகத் தலைமகளை யாற்றுவித்திருந்தமை பாங்கிகூறல் ஈறாகச் சொல்லப்பட்ட இருபத்தொன்றும் வரைவிடைவைத்துப் பொருள்வயிற்பிரிவின் விரியென மொழிந்தனர் ஆராய்ந்தறிந்தோர் என்றவாறு.

அவற்றுள்,