என்பொருட் பிரிவுணர்த்தேந்திழைக்கென்றற்குச் செய்யுள்: 1"கழைபோல் வளர்நெற் கவின்பெற வாரி கவர்ந்துவரும் மழைபோல் வருகுவன் வன்சுரம்போய்த் தஞ்சை வாணன்வெற்பில் இழைபோ லிடையாண் முலைவிலைக் காவன யாவையுங்கொண் டுழைபோ லரிநெடுங் கண்மயி லேசென் றுணர்த்திதுவே," என வரும். பாங்கி நின்பொருட் பிரிவுரை நீயவட்கென்றற்குச் செய்யுள்: 2"வசையும் புகழுநின் மேலன வாந்தஞ்சை வாணன்வெற்பா மிசையுங் கரும்பினில் வேம்புவைத் தாலன்ன வேட்கையெல்லாத் திசையும் பரவுந் திருவனை யாடன் றிருவுளத்துக் கிசையும் படிவல்லை யேற்சொல்லி நீபின் னெழுந்தருளே." எனவும், 3"இறவுப்புறத் தன்ன பிணர்படு தடவுமுதற் சுறவுக்கோட் டன்ன முள்ளிலைத் தாழை பெருங்களிற்று மருப்பி னன்ன வரும்புமுதிர்பு நன்மா னுழையின் வேறுபடத் தோன்றி விழவுக்களங் கமழு முரவுநீர்ச் சேர்ப்ப இனமணி நெடுந்தேர் பாக னியக்கச் செலீஇய சேறி யாயி னிவளே வருவை யாகிய சின்னாள் வாழா ளாதனற் கறிந்தனை சென்மே." எனவும் வரும். நீடேனென்று அவன் நீங்கற்குச் செய்யுள்: 4"காலைப் பொழுது கடும்பரித் தேர்பண்ணிக் கானகம்போய் மாலைப் பொழுது வருகுவல் யான்றஞ்சை வாணனன்னாட் டாலைப் பழனர மணிந்தவெம் மூர்நும் மகங்குளிரச் சோலைப் பயில்குயில் போன்மொழி யாயென் றுணிவிதுவே." எனவும், 5"இன்றே சென்று வருவது நாளைக் குன்றிழி யருவியின் வெண்டேர் முடுக விளம்பிறை யன்ன விளங்குசுடர் நேமி விசும்புவீழ் கொள்ளியிற் பைம்பயிர் துமிப்பக்
1. த. கோ. செ : 260.
2. த. கோ. செ : 261. 3. நற்றிணை, செ : 19. 4. த. கோ. செ : 261. 5. குறு. செ : 189.
|