காலியற் செலவின் மாலை யெய்திச் சின்னிரை வால்வளைக் குறுமகள் பன்மா ணாக மணந்துவக் குவமே." எனவும் வரும். பாங்கி தலைமகட்குத் தலைமகன் செலவுணர்த்தற்குச் செய்யுள்: 1"வில்லேய் குறும்பு மிறும்புமெவ் வாயும் விராயவெவ்வாய்க் கல்லேய் கவலைக் கடங்கடந் தார்நமர் காய்ந்தெதிர்ந்தார் செல்லேய் முரசச் செருவென்ற வாணன்றென் மாறையினின் வல்லேய் முலைவிலை தான்தந்து நாளை மணம்பெறவே." என வரும். தலைமகள் இரங்கற்குச் செய்யுள்: 2"இப்பே ருவகை யினிப்பிரி யேனென்று மென்முன்சொன்ன அப்பே ருரைபழு தாமென்ன வேயர வஞ்சுமந்த மைப்பே ரலைகடல் வையகந் தாங்கிய வாணன்றஞ்சைச் செப்பேரிளங் கொங்கைமங்கைசெப் பாதன்பர் சென்றதுவே." எனவும், 3"செல்வா ரல்லரென் றியானிகழ்ந் தனனே 4ஒல்வா ளல்லளென் றவரிகழ்ந் தனரே யாயிடை, யிருபே ராண்மை செய்த பூசல் நல்லராக் கதுவி யாங்கென் அல்ல னெஞ்ச மலமலக் குறுமே." எனவும் வரும். பாங்கி கொடுஞ்சொற் சொல்லற்குச் செய்யுள்: 5"ஆரணத் தானருள் பாரளித் தானடங் காதவரை வாரணத்தால்வென்ற வாணன்றென் மாறை வயங்கொளிசேர் பூரணத் தார்மதி போன்முகத் தாயென் புலம்புதிநின் காரணத் தாலல்ல வோபிரிந் தாரின்று காதலரே." என வரும்.
1. த. கோ. செ : 263.
2. த. கோ. செ : 264. 3. குறு, செ : 43. 4. (பாடம்) 'விடுவாளல்லள்.' 5. த. கோ. செ : 265.
|