191

தலைவி கொடுஞ்சொற் சொல்லற்குச் செய்யுள்:

1"மண்டுந் திரைவையை சூழ்தஞ்சை வாணற்கு வன்புலியுஞ்
செண்டுங் கொடுத்தகல் செம்பியர் போலன்பர் சென்றுழிமுன்
இரண்டுங் கழையும் பயிலும்வெங் கானியல் கேட்டுமிந்நோய்
கண்டுங் கலங்கல்செல் லாதிந்த வூரெற் கழறனன்றே."

எனவும்,

2"எறும்பி யளையிற் குறும்பல் சுனைய
உலைக்க லன்ன பாறை யேறிக்
கொடுவி லெயினர் பகழி மாய்க்குங்
கவலைத் தென்பவவர் தேர்சென்ற வாறே
யதுமற் றவலங் கொள்ளாது
நொதுமலர்க் கழறுமிவ் வழுங்க லூரே,"

எனவும் வரும்.

வருகுவர் மீண்டெனப் பாங்கி வலித்தற்குச் செய்யுள்:

3"தேர்த்தானை வாணன்றென் மாறைமின் னேயஞ்சல் செம்புருக்கி
வார்த்தா லனைய வழிநெடும் பாலை மடப்பெடை நோய்
பார்த்தா தவந்தணி பாதவ மின்மையிற் பைஞ்சிறகாற்
போர்த்தாலு மஞ்ஞைகண் டும்போவ ரோநம் புரவலரே."

எனவும்,

4"நசைபெரி துடையர் நல்கலு நல்குவர்
பிடிபசி களைஇய பெருங்கை வேழம்
மென்சினை யாஅம் 5பிளக்கும்
அன்பின தோழியவர் சென்ற வாறே."

எனவும் வரும்.

பருவங் கண்டு பெருமகள் புலம்பற்குச் செய்யுள்:

6"மிகவும் பரந்த கரியகண் ணீர்செங்கை வெள்வளைபோல்
உகவுந் துறந்தவ ருன்னல ராலுறை கார்பொழிய
மகவுந் துணையுங் கலைதழு வுந்தஞ்சை வாணன்வெற்பின்
அகவும் பெடைமயி லுந்தமி யேனெங்ங னாற்றுவலே,"

எனவும்,



1. த. கோ. செ : 266.

2. குறு. செ : 12.

3. த. கோ. செ : 267.

4. குறு. செ : 37.

5. (பாடம்) 'பொளிக்கும்,'

6. த. கோ. செ : 268.