1"அணிநிற மஞ்ஞை யகவ விரங்கி மணிநிற மாமலைமேற் றாழ்ந்து - பணிமொழி கார்நீர்மை கொண்ட கலிவானங் காண்டொறும் பீர்நீர்மை கொண்டன தோள்," எனவும் வரும். இகுளை வம்பென்றற்குச் செய்யுள்: 2"தனஞ்சேர்ந்த வஞ்சிநின் சாயல்கண் டஞ்சித் தனித்தனிபோய் வனஞ்சேர்ந் தயர்ந்த மயில்களெல் லாந்தஞ்சை வாணன்வெற்பிற் கனஞ்சேர்ந் தலர்துளி காலுமுன் னேவம்பு காலுமென்னா இனஞ்சேர்ந் தகவின நாந்தனி வாடி யிருத்தல்கண்டே." எனவும், 3"மடவ வாழி மஞ்ஞை மாயினங் கால மாரி பெய்தென வதனெதிர் ஆலலு மாலின பிடவும் பூத்தன காரன் றிகுளை தீர்கநின் படரே கழிந்த மாரிக் கொழிந்த பழநீர் புதுநீர் கொளீஇய வுகுத்தரும் நொதுமல் வானத்து முழங்குகுரற் கேட்டே." எனவும் வரும். இறைமகள் மறுத்தற்குச் செய்யுள்: 4"வாவித் தகையன்ன மேதஞ்சை வாணன் வரையகத்தென் பாவித் தனிநெஞ்சு பார்த்தஞ்சு மேகண் பயின்றகண்ணார் தூவித் தளைமயில் கோபங்கொள் ளாவரத் தோன்றியைச்சேர்ந் தாவித் தகந்தள ரும்மணி காலு மராவென்னவே." எனவும், 5"செல்வச் சிறா அர் சீறடிப் பொலிந்த தவளை வாய பொலஞ்செய் கிண்கிணிக் காசி னன்ன போதீன் கொன்றை குருந்தோ டலம்வரும் பெருந்தண் காலையுங் காரன் றென்றி யாயிற் கனவோ மற்றிது வினவுவல் யானே," எனவும் வரும்.
  
  1. ஐந்திணை ஐம்பது செ : 2.
 2. த. கோ. செ : 269. 3. குறு. செ : 251.  4. த. கோ. செ : 270. 5. குறு. செ : 148. 
 |