193

அவர் தூதாகி வந்தடைந்தது இப்பொழுதெனத் துணைவி சாற்றற்குச் செய்யுள்:

1"இன்னே வருவர்நின் காதல ரேதில ரேங்கவினிக்
கொன்னே யிரங்கி வருந்தல்கண் டாய்கொற்ற நேமிவிந்தை
மன்னே யெனவந்த வாணன்றென் மாறை வரவுணர்த்த
முன்னே நடந்தன காண்கடுங் கால முகிலினமே."

எனவும்,

2"கடுங்கதிர் நல்கூரக் கார்செல்வ மெய்த
நெடுங்காடு நேர்சினை யீனக் - கொடுங்குழாய்
இன்னே வருவர் நமரென் றெழில்வானம்
மின்னு மவர்தூ துரைத்து."

எனவும் வரும்.

தலைமகளாற்றற்குச் செய்யுள்:

3"இன்புற்ற காலத் திருவர்க்கு மொன்றுயி ரென்றுசொன்னார்
அன்புற்ற காதல ராதலி னாலகன் றாரெனநாந்
துன்புற்ற காலத் தவருமு றாரல்லர் தோழிசொல்லும்
வன்புற்ற காரளிக் குந்தஞ்சை வாணன்றென் மாறையிலே,"

என வரும்.

அவன் அவண் புலம்பற்குச் செய்யுள்:

4"விழிகுழியும்படி தேர்வழி பார்த்தெனை வீழ்ந்துவண்டு
கொழுதிமி ருங்குழல் சோரக் கிடந்து குடங்கையின்மேல்
ஒழுகிய வஞ்சன வெள்ளத் துணங்கு மணங்கைமுன்சென்
றெழுகெனு நெஞ்சமென் னேயவ ரோவெனி லென்சொலுமே."

எனவும்,

5"வளைபடு முத்தம் பரதவர் பகருங்
கடல்கெழு கொண்கன் காதன் மடமகள்
கெடலருந் துயர நல்கிப்
படலின் பாயல் வௌவி யோளே."

எனவும் வரும்.



1. த. கோ. செ : 271.

2. கார் நாற்பது, செ : 2.

3. த. கோ. செ : 272.

4. அம்பிகாபதிக் கோவை, செ : 320.

5. ஐங்குறு. செ : 195 அ. வி - 13..