மீண்டு வருகின்ற காலத்துத் தலைமகன் பாகனொடு சொல்லற்குச் செய்யுள்: 1"வன்மா முடுக வலவதிண் டேரினி வாணன்றஞ்சைக் கென்மா லுறு நெஞ்சின் முன்செல நாகிள வேறுபுல்லிப் பொன்மா மணியும் பிரிந்திருந் தாரும் புலம்பமன்றிற் சென்மாலை யந்திகண் டாற்றரி யாளென் றிருந்திழையே," எனவும், 2"பெரும்புன் மாலை யானாது நினைஇ யரும்பட ருழத்தல் யாவ தென்றும் புல்லி யாற்றாப் புரையோட் காண வள்புதெரிந் தூர்மதி வலவநின் புள்ளியற் கலிமாப் பூண்ட தேரே," எனவும் வரும். தலைமகன் மேகத்தொடு சொல்லற்குச்செய்யுள்: 3"வேண்டும் பொருளைத் தரும்பொருட் போய்முற்றி | மீண்டவென்றேர் | தூண்டும் பரிமுன் றுனைமுகில் காள்சென்று | சொல்லுமிந்து | தீண்டுங் கொடிமதில் சூழ்தஞ்சை வாணனைச் | சேரலர்போல் | ஈண்டும் பசலைமெய் போர்த்திருப் பார்தமக் | கென்வரவே." |
என வரும். பாங்கி வலம்புரி கேட்டு அவன் வரவறிவுறுத்தற்குச் செய்யுள்: 4"பொருகின்ற செங்கயல் போல்விழி யாய்பண்டு போயநின்கைக் குருகின் றணிந்திறை கொள்வது காண்கநங் கொண்கர் பொற்றேர் தருகின்ற சங்கத் தருவன்ன வாணன் றமிழ்த்தஞ்சைவாய் வருகின்ற தென்றுமுன் னேயோகை கூறும் வலம்புரியே." எனவும், "ஈயலின் மூதாய் பரப்ப வினமரீஇக் கோவல ரூதுங் குழலிரங்கக் கோபந்
1. த. கோ. செ : 274.
2. ஐங்குறு, செ : 486. 3. த. கோ. செ : 275. 4. த. கோ. செ : 276.
|