தவழக்கார் செய்தன்று தையலாய் வந்தார் இமிழப் படுஞ்சங் கொலி." எனவும் வரும். வலம்புரி கிழத்தி வாழ்த்தற்குச் செய்யுள்: 1"மால்வண் டெனமன்னி வாணன்றென் மாமறைமன் னன்புகழே போல்வண் டமிழ்மன்னர் போற்ற விளங்குக பொன் கொழிக்குங் கால்வண்டல் வையைக் கரைமல்கு மல்லிகைக் கான்முகையின் மேல்வண் டிருந்தது போற்கரு மாமுக வெண்சங்கமே." எனவும், "புரிவளை வான்கோடே புத்தேளொ டொத்தி திருமவர் மார்பனு மேந்தினான் றம்மு னுருவம் புரையுநின் கேழ்." எனவும் வரும். தலைமகன் வந்துழிப் பாங்கி நினைத்தமை வினாதற்குச் செய்யுள்: 2"நினையீர் பொருட்குப் பிரிந்தய னாட்டுழி நின்றுழிவேள் அனையீர் நினைந்து மறிதிர்கொல் லோவஞ்சொ லாலறிவோர் வனையீ ரிதழ்க்கண்ணி வாணன்றென் மாறையை வாழ்த்தலர்போ னனையீ ரிதழ்க்கண்வை காவெவ்வ நோயுற்ற நவ்வியையே." என வரும். தலைமகன் நினைத்தமை செப்பற்குச் செய்யுள்: 3"கானெடுங் குன்றங் கடந்துசென் றேனொரு காலுமைதோய் மானெடுங் கண்ணி மறந்தறி யேன்வண்கை வாணன்றஞ்சை நீனெடும் பெண்ணைக் குரும்பையுஞ் சூது நெருங்குகொங்கைத் தேனெடுங் கண்ணிமென் பூங்குழன் மாதர் திருமுகமே." என வரும். தலைமகளை ஆற்றுவித்திருந்த அருமை பாங்கி கூறற்குச் செய்யுள்: 4"உயரா மலகத் தருங்கனி நீர்நசைக் குண்சுரம்போய் வியராம லில்லின் விடுத்தகன் றாளைமென் பூஞ்சிலம்பா
1. த. கோ. செ : 277.
2. த. கோ. செ : 278. 3. த. கோ. செ : 279. 4. த. கோ. செ : 280.
|