அயராம லஞ்சலென் றாற்றுவித் தேனிவ் வவனியெல்லா மயராமல் வந்த பிரான்றஞ்சை வாணன்றென் மாறையிலே." என வரும். இவற்றுள், என்பொருட் பிரிவுணர்த்தேந்திழைக்கென்றலும், பாங்கி தலைவிக்கு அவன் செலவுணர்த்தலுமாகிய இரண்டும் பிரிவறிவுறுத்தற்குரிய, பாங்கி நின்பொருட்பிரிவுரை நீயவட்கென்றலாகிய ஒன்றும் பிரிவுடன் படாமைக்குரித்து; தலைமகன் நீடேனென் றவனீங்கலாகிய ஒன்றும் பிரிவுடன்படுத்தற்கும் பிரிவுடன்படுதற்கு முரித்து; தலைமகள் இரங்கலும், பாங்கி கொடுஞ்சொற்சொல்லலும், பருவங்கண்டு பெருமகள் புலம்பலும், இறைமகள் மறுத்தலும், அவனவண்புலம்பலுமாகிய ஐந்தும் பிரிவுழிக் கலங்கற்குரிய; தலைவி கொடுஞ்சொற்சொல்லலும், வருகுவர் மீண்டெனப் பாங்கி வலித்தலும், இகுளை வம்பென்றலும், அவர் தூதாகி வந்தடைந்த திப்பொழுதென்றலுமாகிய நான்கும் வன்புறைக்குரிய; தலைமகளாற்றலாகிய ஒன்றும் வன்பொறைக்குரித்து; தலைமகன் மீண்டுவருங்காலைப் பாகன்றன்னொடு சொல்லலும், மேகந்தன்னொடு சோகங்கொண்டவன் சொல்லலுமாகிய இரண்டும் வரும் வழிக் கலங்கற்குரிய; பாங்கி வலம்புரி கேட்டு அவன் வரவறிவுறுத்தல் முதலாகிய ஐந்தும் வந்துழி மகிழ்ச்சிக்குரிய எனக் கொள்க. (54)
இரண்டாவது களவியல் முற்றிற்று.
|