வரைவுமலிதலின் விரி 174. காதலன் முலைவிலை விடுத்தமை பாங்கி காதலிக் குணர்த்தலும் காதலி நற்றாய் உள்ள மகிழ்ச்சி யுள்ளலும் பாங்கி தமர்வரை வெதிர்ந்தமை தலைவிக் குணர்த்தலும் அவளுவகை யாற்றா துளத்தொடு கிளத்தலும் தலைவனைப் பாங்கி வாழ்த்தலும் தலைவி மணப்பொருட்டாக அணங்கைப் பராநிலை காட்டலும் கண்டோன் மகிழ்வுமென் றீட்டிய இருமூன்று மொன்றும் வரைவு மலிதற்காம் விரியென விளம்பினர் மெய்யுணர்ந் தோரே. (இ - ம்.) வரைவுமலிதலின்விரி உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) காதலன் முலைவிலை விடுத்தமை பாங்கி காதலிக்குணர்த்தல் முதலாகக் கண்டோன் மகிழ்தல் ஈறாகச் சொல்லப்பட்ட ஏழும் வரைவுமலிதலின்விரி யென விளம்பினர் மெய்யுணர்ந்தோர் என்றவாறு, அவற்றுள், காதலன் முலைவிலைவிடுத்தமை பாங்கி காதலிக்குணர்த்தற்குச் செய்யுள்: 1"தொலைவிலை யாகிய பல்பொருள் காதலர் சூதமர்நின் முலைவிலை யாக முகந்தளித் தார்முனை வேந்தர்தம்மைத் தலைவிலை யாகத் திறைகொண்ட வாணன் தமிழ்த்தஞ்சைநீ யுலைவிலை யாகுக பொன்வண்ண மாறுக வொண்ணுதலே," எனவும், 2"எக்கர் ஞாழன் மலரின் மகளிர் ஒண்டழை யயருந் துறைவன் றண்டழை விலையென நல்கின னாடே." எனவும் வரும். காதலி நற்றாய் உள்ளமகிழ்ச்சி உள்ளற்குச் செய்யுள்: 3"கயமா மலரெனுங் கண்ணியை வண்டெனுங் காளைபல்புள் இயமா மணம்புண ரீர்ந்துறை நாடரெதிர்ந்தவர்மேல்
1. த. கோ. செ : 281.
2. ஐங்குறு, செ : 147. 3. த. கோ. செ : 282.
|