வயமா நடத்திய வாணன்றென் மாமறை வருகுவரேல் நயமா மணவணி கண்டியாயு மின்புறு நம்மினுமே."
எனவும், 1"குன்றக் குறவன் சாந்த நறும்புகை தேங்கமழ் சிலம்பின் வரையகங் கமழுங் கானக நாடன் வரையின் மன்றலு முடையள்கொ றோழி யாயே." எனவும் வரும். பாங்கி தமர்வரைவெதிர்ந்தமை தலைமகட்குணர்த்தற்குச் செய்யுள்: 2"மணிப்பா லிகைமுத்தம் வைத்தாங் கடம்பலர் வார்திரைதூ யணிப்பாய் துவலையரும்புந் துறைவர்க் கணியெதிர்ந்து பணிப்பா சிழையல்குல் வெண்ணகை யாய்நமர் பாரநின்னோய் தணிப்பான் முரசறைந் தார்தஞ்சை வாணன் றமிழ்நிலத்தே." எனவும், 3"அம்ம வாழி தோழி நம்மொடு சிறுதினைக் காவல னாகிப் பெரிதுநின் மென்றோண் ஞெகிழவந் திருநுதல் பசப்பவும் பொன்போல் விறற்கவின் றொலைத்த குன்ற நாடற் கயர்வர்நன் மணனே." எனவும் வரும். தலைமகள் உவகையாற்றாது உளத்தொடு கிளத்தற்குச் செய்யுள்: 4"சோகா குலமெய்தல் காண்டுநெஞ் சேநந் துறைவரெனும் நீகா னுடன்பள்ளி நீள்வங்க மேறி நிலம்புரக்கும் மாகா விரியன்ன வாணன்றென் மாறைமன் னன்பகையும் ஏகா விருட்கங்கு லாங்கடற் காலை யெனுங்கரையே." எனவும், 5"இலையடர் தண்குளவி யேய்ந்த பொதும்பிற் குலையுடைக் காந்த ளினவண் டிமிரும்
1. ஐங்குறு, செ : 253.
2. த. கோ. செ : 283. 3. ஐங்குறு. செ : 230. 4. த. கோ. செ : 284. 5. ஐந்திணை எழுபது, செ : 3.
|