200

வரையக நாடனும் வந்தான் மற்றன்னை
யலையு மலைபோயிற் றின்று.

எனவும் வரும்.

தலைவனைப் பாங்கி வாழ்த்தற்குச் செய்யுள்:

1"மாரியஞ்சுங்கொடை வாணன்றென் மாறையில் வாழிவண்டார்
வேரியந் தொங்கல் விரைகமழ் மார்ப விடாதவம்பல்
சேரியம் பொய்கைத் துறையலர் வாடநுஞ் செவ்விமணந்
தூரியஞ் சங்கதி ரக்காட்டு நீயன்று சூட்டலரே."

எனவும்,

2"எரிமருள் வேங்கை யிருந்த தோகை
யிழையணி மடந்தையிற் றோன்று நாட
இனிதுசெய் தனையா னுந்தை வாழியர்
நன்மனை வதுவை யயரவிவள்
பின்னிருங் கூந்தன் மலரணிந் தோயே."

எனவும் வரும்.

தலைவி மணம்பொருட்டாக அணங்கைப் பராநிலை பாங்கி தலைமகற்குக் காட்டற்குச் செய்யுள்:

3"உரவிப் பெருங்கலித் துன்பங்கள் போய்முத லூழியின்பம்
வரவிப் படிதன்னை வாழ்வித்த வாணன்றென் மாறையன்னான்
புரவிப் புனைநெடுந் தேரண்ண லேநின் பொருட்டணங்கைப்
பரவிப் பரவிநின் றேவரம் வேண்டுதல் பார்த்தருளே."

என வரும்.

தலைமகள் அணங்கைப் பராநிலைகண்ட தலைமகன் மகிழ்தற்குச் செய்யுள்:

4"இவ்வித் தகமிவட் கெய்திய தெவ்வண மெவ்வுலகும்
வவ்வித் திகழ்புகழ் வாணன்றென் மாறை மணப்பொருட்டால்
நவ்வித் தொகையின நாணுமென் னோக்கி நறைபுகையாச்
செவ்வித் தகைமலர் தூய்த்தெய்வம் வாழ்த்துந் திருத்தகவே."

எனவும்,

5"குன்றக் குறவன் காதன் மடமகள்
மன்ற வேங்கை மலர்சில கொண்டு



1. த. கோ. செ : 285.

2. ஐங்குறு, செ : 294.

3. த. கோ. செ : 286.

4. த. கோ. செ : 287.

5. ஐங்குறு. செ : 259.