203

1"யாமெங் காமந் தாங்கவுந் தாந்தங்
கெழுதகை மையி னழுதன தோழி
கன்றாற்றுப் படுத்த புன்றலைச் சிறாஅர்
மன்ற வேங்கை மலர்பத நோக்கி
யேறா திட்ட வேமப் பூசல்
விண்டோய் விடரகத் தியம்புங்
குன்ற நாடற் கண்டவெங் கண்ணே."

எனவும் வரும்.

தலைமகன் தெய்வங்காட்டித் தெளிப்பத்தெளிந்தமை எய்தக் கூறற்குச் செய்யுள்:

2"துதித்தே னணங்கொடு சூளுமுற்றேனென்ற சொல்லைமெய்யா
மதித்தே னயர்ந்து மதியிலி யேன்றஞ்சை வாணன்வையை
நதித்தே னினம்புணர் மாதர்கண் போல நகைக்குநெய்தற்
பொதித்தே னுகர்ந்தக லுங்கழிக் கானற் புலம்பர்வந்தே."

எனவும்,

3"கண்டிரண் முத்தம் பயக்கு மிருமுந்நீர்ப்
பண்டங்கொ ணாவாய் வழங்குந் துறைவனை
முண்டகக் கானலுட் கண்டே னெனத்தெளிந்தே
னின்ற வுணர்விலா தேன்."

எனவும் வரும்.

தலைமகன் இகந்தமை தலைமகள் பாங்கிக்கு இயம்பற்குச் செய்யுள்:

4"வரியோல வண்டலை தண்டலைசூழ்தஞ்சை வாணன்வண்மைக்
குரியோ னுயர்வையை யொண்டுறை வாயுர வோர்தெளித்துங்
கரியோர் பிறரில்லை யென்றகன் றாரினிக் காரிகையாய்
பெரியோர் மொழிபிற ழாரென்று தேறுதல் பேதைமையே."

எனவும்,

5"யாரு மில்லைத் தானே கள்வன்
றானது பொய்ப்பின் யானெவன் செய்கோ
தினைத்தா ளன்ன சிறுபசு ங்கால



1. குறு. செ : 241.

2. த. கோ. செ : 290.

3. ஐந்திணை எழுபது, செ : 59.

4. த. கோ. செ : 291.

5. குறு. செ : 25.