வொழுகுநீ ராரல் பார்க்குங் குருகு முண்டுதான் மணந்த ஞான்றே." எனவும் வரும். இது தெளிவிடை விலங்கல், அதுகேட்ட பாங்கி இயற்பழித்துரைத்தற்குச் செய்யுள்: 1"மழவே துறந்து மறந்தவர் போற்றஞ்சை வாணன்வென்றி முழவேய முந்நீர் முழங்கிருங் கானன் முழுதுலகுந் தொழவே தருந்தெய்வ நோக்கிச்செல் லேனென்று சொல்லியுநீ யழவே துறந்தன ரானல்லர் நல்லரவ் வாடவரே." என வரும். தலைமகள் இயற்பட மொழிதற்குச் செய்யுள்: 2"மாகப் புயன்மண்ணில் வந்தன்ன வாணன்றென் மாறைமுந்நீர் நாகப் புகர்ச்செய்ய புள்ளிப்பைங் கான்ஞெண்டு நாகிளந்தண் பூகக் குளிர்நிழற் பேடையொ டாடும் புலம்பரின்னா ராகக் கருதினல் லாயினி யாரினி யாருளரே." எனவும், 3"அடம்பம் னெடுங்கொடி யுள்புதைந் தொளிப்ப வெண்மணல் விரிக்குந் தண்ணந் துறைவன் கொடிய னாயினு மாக அவனே தோழியென் னுயிர்கா வலனே." எனவும் வரும். தெய்வம் பொறைகொளச் செல்குவம் என்றற்குச் செய்யுள்: 4"மாதங்க நல்குங்கை வாணன்றென் மாறைவை யைத்துறைவர் ஏதம் பயந்தில ரெங்கட்கு நீயெம் மிகந்ததனாற் கோதம் படாதி கொடுந்தெய்வ மேயென்று கூர்பலிதூய்ப் பாதம் பரவநல் லாயிரு வேமும் படர்குவமே." எனவும், 5"பெருந்தோ ணெகிழ வவ்வரி வாடச் சிறுமெல் லாகம் பெரும்பசப் பூர
1. த. கோ. செ : 292.
2. த. கோ. செ : 293. 3. தொல், பொருள், களவியல், 20-ஆம் சூ. உரை மேற்கோள். 4. த. கோ. செ : 294. 5. நற்றிணை, செ : 358.
|