205

வின்னே மாக வெற்கண்டு நாணி
நின்னொடு தெளித்தன ராயினு மென்னதூ உம்
அணங்க லோம்புமதி வாழிய நீயெனக்
கணங்கெழு கடவுட் குயர்பலி தூஉய்ப்
பரவினம் வருகஞ் சென்மோ தோழி
பெருஞ்சே யிறவின் றுய்த்தலை முடங்கல்
சிறுவெண் காக்கை நாளிரை பெறூஉம்
பசும்பூண் வழுதி மருங்கை யன்னவெ
னரும்பெற லாய்கவின் றொலையப்
பிரிந்தாண் டுறைதல் வல்லி யோரே."

எனவும் வரும்.

இல்வயிற் செறித்தமை சொல்லற்குச் செய்யுள்:

1"தன்போ லுலகம் புரக்கின்ற வாணன் றமிழ்த் தஞ்சையார்
மன்போ லெவர்க்கும் வழங்கியுண் ணாதவர் வைத்திழக்கும்
பொன்போ லிறுகப் பொதிந்துகொண் டாளன்னை பூவையென்மேல்
வன்போ தியமட வாரலர் தூற்றியவாறு கண்டே."

எனவும்,

2"பெருநீ ரழுவத் தெந்தை தந்த
கொழுமீ னுணங்கற் படுபுள ளோப்பி
யெக்கர்ப் புன்னை யின்னிழ லசைஇச்
செக்கர் ஞெண்டின் குண்டளை கெண்டி
ஞாழ லோங்குசினைத் தொடுத்த கொடுங்கழித்
தாழை வீழ்கயிற் றூச றூங்கிக்
கொண்ட லிடுமணற் குரவை முனையின்
வெண்டலைப் புணரி யாயமொ டாடி
மணிப்பூம் பைந்தழை தைஇ யணித்தகப்
பல்பூங் கான லல்கினம் வருதல்
கவ்வை நல்லணங் குற்ற விவ்வூர்க்
கொடிதறி பெண்டிர் சொற்கொண் டன்னை
கடிகொண் டனளே தோழி பெருந்துறை
யெல்லையு மிரவு மென்னாது கல்லென
வலவ னாய்ந்த வண்பரி
நிலவுமணற் கொட்குமோர் தேருண் டெனவே."

எனவும் வரும்.


1. த. கோ. செ : 295.

2. அகம். செ : 20.