வெறி விலக்கற்குச் செய்யுள்: 1"அறியா மையானொன்று கேட்கலுற் றேனும்மை யாவதொன்றுங் குறியா மறியுயிர் கொள்ளவென் றோகுரு திப்பலிகூர் வெறியா லிவளுயிர் மீட்கவென் றோவென்றி வேல்வலத்தீர் சிறியார் மனையில்வந் தீர்தஞ்சை வாணன் சிலம்பினின்றே." எனவும், 2"கடவுட் கற்சுனை யடையிறந்தவிழ்ந்த பறியாக் குவளை மலரொடு காந்தட் குருதி யொண்பூ வுருகெழக் கட்டிப் பெருவரை யடுக்கம் பொற்பச் சூர்மகள் அருவி யின்னியத் தாடு நாடன் மார்புதர வந்த படர்மலி யருநோய் நின்னணங் கன்மை யறிந்து மண்ணாந்து கார்நறுங் கடம்பின் கண்ணி சூடி வேலன் வேண்ட வெறிமனை வந்தோய் கடவு ளாயினு மாக மடவை மன்ற வாழிய முருகே." எனவும் வரும் . செவிலி தோழியை வினாதற்குச் செய்யுள் 3"மண்குன்ற வந்த கலியினைமாற்றிய | வாணன் றஞ்சை | யொண்குன்ற மங்கையர் முன்னர்மின் னேயுமை | யாள்மகனைப் | பண்குன்ற வென்றசொல் வள்ளிதன் கோனைப்பைந் | தாரயிலால் | வெண்குன் றெறிந்தசெவ் வேளையிவ் வாறென் | விளம்பியதே." |
என வரும். தோழி பூத்தருபுணர்ச்சியால் அறத்தொடுநிற்றற்குச் செய்யுள்: 4"போருறை தீக்கணை போலுநின் கண்கண்டு போதவஞ்சி நீருறை நீலமு நீயுநண் பாகென்று நின்மகட்கோர் தாருறை தோளவர் தந்தனர் வாணன் றமிழ்த்தஞ்சைசூழ் காருறை சோலையில் யாம்விளை யாடிய காலையிலே."
1. த. கோ. செ : 298. 2. நற்றிணை, செ : 34. 3. த. கோ. செ : 299. 4. த. கோ. செ : 300.
|