211

உடன்போக்கின் விரி

182. பாங்கி தலைவற் குடன்போக் குணர்த்தலும்
ஆங்கவன் மறுத்தலும் அவளுடன் படுத்தலும்
தலைவன் போக்குடன் படுதலும் பாங்கி
தலைவிக் குடன்போக் குணர்த்தலும் தலைவி
நாணழி பிரங்கலும் கற்புமேம் பாடு
பூண்முலைப் பாங்கி புகறலும் தலைவி
ஒருப்பட் டெழுதலும் விருப்புடைப் பாங்கி
சுரத்தியல் உரைத்துழிச் சொல்லலும் பாங்கி
கையடை கொடுத்தலும் வைகிருள் விடுத்தலும்
அவன்சுரத் துய்த்தலும் அசைவறிந் திருத்தலும்
உவந்தலர் சூட்டி உண்மகிழ்ந் துரைத்தலும்
கண்டோ ரயிர்த்தலும் காதலின் விலக்கலும்
தம்பதி அணிமை சாற்றலும் தலைவன்
தன்பதி அடைந்தமை தலைவிக் குணர்த்தலும்
என்றிவை ஒன்பதிற் றிருவகைக் கிளவியும்
ஒன்றிய அன்பின் உடன்போக்கு விரியே.

(இ - ம்.) உடன்போக்கின் விரி உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) பாங்கி தலைவற் குடன்போக்குணர்த்தல் முதலாகத் தலைவன் தன்பதி அடைந்தமை தலைவிக்குணர்த்தல் ஈறாகச் சொல்லப்பட்ட பதினெட்டும் பொருந்திய அன்பினையுடைய உடன்போக்கு விரியாம் என்றவாறு.

அவற்றுள், பாங்கி தலைவற் குடன்போக்குணர்த்தற்குச் செய்யுள்:

1"மைந்நீர் நெடுங்கண் மடந்தை யுடன்றஞ்சை வாணன்வெற்பா
செந்நீர் விழவணி நின்னகர்க் கேகொண்டு சேர்ந்தருணமற்
றிந்நீர்மை யல்லதொ ராறுமின் றாலிங்கெம் மையரென்றான்
முந்நீ ருலகுங்கொள் ளார்விலை யாக முலையினுக்கே."

எனவும்,


1. த. கோ. செ : 305.