212

1"மூத்தோ ரன்ன வெண்டலைப் புணரி
யிளையோ ராடும் வரிமனை சிதைக்குந்
தளையவிழ் தாழைக் கானலம் பெருந்துறைச்
சில்செவித் தாக்கிய புணர்ச்சி யலரெழ
இல்வயிற் செறித்தமை யறியாய் பன்னாள்
வருமுலை வருத்தா வம்பகட்டு மார்பில்
தெருமர லுள்ளமொடு வருந்து நின்வயின்
நீங்கு கென்றியான் யாங்ஙன மொழிகோ
அருந்திறற் கடவுளர் செல்லூர்க் குணாஅது
பெருங்கடன் முழக்கிற் றாகி யாணர்
இரும்பிடம் படுத்த வடுவுடை முகத்தர்
கடுங்கட் கோசர் நியம மாயினு
முறுமெனக் கொள்ளுந ரல்லர்
நறுநுத லரிவை பாசிழை விலையே."

எனவும் வரும்.

தலைவன் உடன்போக்கு மறுத்தற்குச் செய்யுள்:

2"பாரோ முலைவிலை யென்பர்நின் கேளிரென் பல்கிளைவாழ்
ஊரோ வணியதன் றொண்டொடி யாய்விந்தை யுண்கண்களோ
தாரோ வளரும் புயன்றஞ்சை வாணன் றரியலர்போல்
யாரோ தனிநடப் பாரருங் கான மிவளுடனே."

எனவும்,

3"இரும்புலிக் கிரிந்த கருங்கட் செந்நாகு
நாட்டயிர் கடைகுரல் கேட்டொறும் வெரூஉம்
ஆநிலைப் பள்ளி யல்க நம்மொடு
மானுண் கண்ணியும் வருமெனின்
வாரார் யாரோ பெருங்க லாறே."

எனவும் வரும்.

பாங்கி தலைமகனை உடன்படுத்தற்குச் செய்யுள்:

4"சுருளேய் குழலுஞ் சுணங்கேய் முலையுஞ் சுமந்துகற்புப்
பொருளே யெனச்சுரம் போதுமப் போது புகழ்வெயிலான்


1 .அகம். செ :90.

2. த. கோ. செ :306.

3. தொல், பொருள், அகத்திணை இயல், 41-ஆம் சூ. உரை மேற்கோள்.

4. த. கோ. செ :307.