மருளேய் கலியிருண் மாற்றிய வாணன்றென் மாறையினி னருளே யொழியவுண் டோநிழ லாவ தணங்கினுக்கே." எனவும், 1"நீர்கால் யாத்த நிரையிதழ்க் குவளை 2கோடை யொற்றினும் வாடா தாகுங் கவணை யன்ன பூட்டுப்பொரு தசாஅ வுமணெருத் தொழுகைத் தோடுநிரைத் தன்ன முளிசிளை பிளக்கு முன்பின் மையின் யானை கைம்மடித் துயவுங் கானமு மினியவா நும்மொடு வரினே." எனவும் வரும். தலைவன் போக்குடன் படுதற்குச் செய்யுள்: 3"நஞ்சோ வழலோ வெனுஞ்சுர மோசெல்ல நாடியவென் னெஞ்சோ கொடியது நேரிழை யாய்நிழன் மாமதியோ மஞ்சோ தவழ்மதில் சூழ்தஞ்சை வாணன் வரையிலவம் பஞ்சோ வனிச்சங்கொ லோவெனுஞ் சீறடிப்பைந்தொடிக்கே." எனவும், 4"ஆறுசெல் வருத்தத்துச் சீறடி சிவப்பவுஞ் சினைநீங்கு தளிரின் வண்ணம் வாடவுந் தான்வர றுணிந்த விவளினு மிவளுடன் வேய்பயி லழுவ முவக்கும் பேதை நெஞ்சம் பெருந்தக வுடைத்தே." எனவும் வரும். பாங்கி தலைவிக்கு உடன்போக்கு உணர்த்தற்குச் செய்யுள்: 5"பாலன்ன பாயற் பகையென்னுஞ் சீறடி பட்டுருவும் வேலன்ன கூர்ங்கன் மிதிக்குங்கொ லென்றனர் மேதினிக்கு மாலன்ன வாணன்றென் மாறைநன் னாட்டு வயலுகளுஞ் சேலன்ன நீள்விழி யாய்தெரி யாதன்பர் சிந்தனையே." எனவும்,
1. குறு. செ : 388. (பாடம்) 2. 'கோடை ஏற்றினும்.' 3. த. கோ. செ : 308. 4. தொல், பொருள், அகத்திணை, இ:41 - ஆம் சூ. மேற்கோள் உரை 5. த. கோ. செ :309.
|