1"குன்றக் குறவ னார மறுத்தென நறும்புகை சூழ்ந்து காந்த ணாறும் வண்டிமிர் சுடர்நுதற் குறுமகள் கொண்டனர் செல்வர்தங் குன்றுகெழு நாட்டே." எனவும் வரும். தலைவி நாணழி விரங்கற்குச் செய்யுள்: 2"மறவாகை வேலங்கை வாணனை மாறையர் மன்னனைத்தம் உறவாக வெண்ணி யுறாதவர் போலுயி ரோம்பியென்றுந் துறவாத நாணந் துறப்பது வேண்டலிற் றொல்லுலகிற் பிறவா தொழிகைநன் றேயொரு காலமும் பெண்பிறப்பே." எனவும், 3"அளிதோ தானே நாணே நம்மொடு நனிநீ டுழந்தன்று மன்னே யினியே வான்பூங் கரும்பி னோங்குமணற் சிறுசிறை தீம்புன னெரிதர வீழ்ந்துக் கா அங்குத் தாங்கு மளவைத் தாங்கிக் காம நெரிதரக் கைந்நில் லாதே." எனவும் வரும். கற்புமேம்பாடு பூண்முலைப்பாங்கி புகறற்குச் செய்யுள்: 4"செந்நாண் மலரிற் றிருவன்ன கோலத் தெரிவையர்க்கு மெய்ந்நா ணுயிரினு மிக்கதென் றால்விர வாவரசர் தந்நாண் முறைமை தவிர்த்தருள் வாணன் றமிழ்த்தஞ்சைநாட் டந்நா ணமுமட வாய்கற்பு நோக்க வழகிதன்றே." என வரும். தலைவி ஒருப்பட்டு எழுதற்குச் செய்யுள்: 5"பலரே சுமந்த வுரைகளுந் தாயர்தம் பார்வைகளும் சிலரே சுமந்து திரியவல் லார்செய்ய செண்பகநாண் மலரே சுமந்த வயற்றஞ்சை வாணனை வாழ்த்தலர்போல் அலரே சுமந்து சுமந்திந்த வூர்நின் றழுங்குகவே."
1. ஐங்குறு. செ : 254. 2. த. கோ. செ : 310. 3. குறு. செ : 149. 4. த. கோ. செ : 311. 5. த. கோ. செ : 312.
|