1"சிலரும் பலருங் கடைக்க ணோக்கி மூக்கி னுச்சிச் சுட்டுவிரல் சேர்த்தி மறுகிற் பெண்டி ரம்பல் தூற்றச் சிறுகோல் வலந்தன ளன்னை யலைப்ப வலந்தனென் வாழி தோழி கானற் புதுமலர் தீண்டிய பூநாறு குரூஉச்சுவற் கடுமா பூண்ட நெடுந்தேர் கடைஇ நடுநாள் வரூஉ மியறேர்க் கொண்கனொடு செலவயர்ந் திசினால் யானே யலர்சுமந் தொழிகவிவ் வழுங்க லூரே. எனவும் வரும். பாங்கி சுரத்தியல் உரைத்துழித் தலைமகள் சொல்லற்குச் செய்யுள்: 2"செல்லிற் கொடிய களிற்றண்ணல் வாணன்றென் மாறைமன்னன் வில்லிற் கொடிய புருவமின் னேயென் விளம்புதிநீ சொல்லிற் கொடியநம் மன்னையைப் போல்பவர் சூழ்ந்திருக்கும் இல்லிற் கொடியகொல் லோசெல்லு நாட்டவ் விருஞ்சுரமே." எனவும், 3"கடக்கருங் கானத்துக் காளைபின் னாளை நடக்கவும் வல்லையோ வென்றி - சுடர்த்தொடீஇ பெற்றா னொருவன் பெருங்குதிரை யந்நிலையே கற்றா னஃதூரு மாறு." எனவும் வரும். பாங்கி தலைமகளைத் தலைமகற்குக் கையடை கொடுத்தற்குச் செய்யுள்: 4"பறந்திருந் தும்பர் பதைப்பப் படரும் புரங்கரப்பச் சிறந்தெரி யாடிதென் றில்லையன் னாடிறத் துச்சிலம்பா அறந்திருந் துன்னரு ளும்பிறி தாயி னருமறையின் திறந்திரிந் தார்கலி யும்முற்றும் வற்றுமிச் சேணிலத்தே." எனவும், 5"நீற்கட லுண்ட புயல்போற் கருகி நிறைந்ததிருப் பாற்கட லுண்ட புயல்போலு நாளும் பரிந்தருள்வாய்
1. நற்றிணை, செ : 149. 2. த. கோ. செ : 313. 3. நாலடியார் செ : 398. 4. திருக்கோவையார், செ : 213. 5. திருவாரூர்க்கோவை, செ : 226.
|