சேற்கட னஞ்சுண்ட வாரூர்த் தியாகர் செழுங்கயிலை போற்கட னாகமன் னாவெங்கள் மாதின் புரிகுழலே." எனவும், 1"நனைமுதிர் ஞாழற் சினைமரு டிரள்வீ நெய்தன் மாமலர்ப் பெய்தல் போல வூதை தூற்று முரவுநீர்ச் சேர்ப்ப தாயுடன் றலைக்குங் காலையும் வாய்விட் டன்னா யென்னுங் குழவி போல இன்னா செயினு மினிதுதலை யளிப்பினு நின்வரைப் பினளென் றோழி தன்னுறு விழுமங் களைஞரோ விலளே." எனவும்,
"இவளே நின்னல திலளே யாயுங் குவளை யுண்க ணிவளல திலளே யானு மாயிடை யேனே, மாமலை நாட மறவா தீமே," எனவும் வரும். பாங்கி வைகிருள் விடுத்தற்குச் செய்யுள்: 2"பொழிநான மன்றலம் பூங்குழ னீங்கள் புணர்ந்துசெல்லும் வழிநாடி நும்பின் வருகுவல் யான்றஞ்சை வாணன்வையைச் சுழிநாணு முந்திநின் றொல்கிளைக் கேற்பன சொல்லியின்னா மொழிநா வடங்க மொழிந்தய லாரை முகங்கவிழ்த்தே." எனவும், 3"வேலும் விளங்கின வினையரு மியன்றனர் தாருந் தையின தழையுந் தொடுத்தன நிலநீ ரற்ற வெம்மை நீங்கப் பெயனீர் தலைஇ யுலவை யிலைநீத்துக் குறுமுறி யீன்றன மரனே நறுமலர் வேய்ந்தன போலத் தோன்றிப் பலவுடன் றேம்படப் பொதுளின பொழிலே கானமும் நனிநன் றாகிய பனிநீங்கு வழிநாட் பாலெனப் பரத்தரு நிலவின் மாலைப் போதுவந் தன்று தூதே நீயுங்
1. குறு. செ : 397. 2. த. கோ. செ : 315. 3. அகம் : 259.
|