217

கலங்கா மனத்தை யாகி யென்சொ
ளயந்தனை கொண்மோ நெஞ்சமர் தகுவி
தெற்றி யலறினும் வயலை வாடினும்
நொச்சி மென்சினை வணர்குரல் சாயினும்
நின்னினு மடவ ணனிநின் னயந்த
அன்னை யல்ல றாங்கிநின் னையர்
புலிமருள் செம்ம னோக்கி
வலியா யின்னுந் தோய்கநின் முலையே."

எனவும் வரும்.

தலைமகளைத் தலைமகன் சுரத்துய்த்தற்குச் செய்யுள்:

1"தளிபோற் கொடைபயில் சந்திர வாணன் றமிழ்த்தஞ்சையான்
அளிபோற் குளிர்ந்த விளமரக் காவு மவன்புகழின்
ஒளிபோல் விளங்கிய வெண்மணல் யாறு முவந்துகண்டு
நளிபோ தவிழ்குழ லாய்மெல்ல மெல்ல நடந்தருளே."

எனவும்,

2"அழிவில முயலு மார்வ மாக்கள்
வழிபடு தெய்வங் கட்கண் டாஅங்கு
அலமரல் வருத்தந் தீர யாழநின்
னலமென் பணைத்தோ ளெய்தின மாகலிற்
பொரிப்பூம் புன்கி னெழிற்றகை யொண்முறி
சுணங்கணி வனமுலை யணங்குகொளத் திமிரி
நிழல்காண் டோறு நெடிய வைகி
மணல்காண் டோறும் வண்ட றைஇ
வருந்தா தேகுமதி வாலெயிற் றோயே
மாநனை கொழுதி மகிழ்குயி லாலு
நறுந்தண் பொழில் கானங்
குறும்ப லூரயாஞ் செல்லு மாறே."

எனவும் வரும்.

தலைமகன் தலைமகளசைவு அறிந்திருத்தற்குச் செய்யுள்:

3"வரமாமை வேற்படை வாணன்றென் மாறை வணங்கலர்கள்
புரமான வல்லழல் பொங்குவெங் கானிற் பொருந்தியகூர்
அரமான கல்லுன் னடிமல ராற்றல வாதலினாஞ்
சுரமாறு மெல்லைநல் லாயிருப் பாமிந்தச் சோலையிலே."

என வரும்.


1. த. கோ. செ : 316.

2. நற்றிணை, செ : 9.

3. த. கோ. செ : 317.