தலைமகன் தலைமகளை உவந்தலர்சூட்டி உண்மகிழ்ந்துரைத்தற்குச் செய்யுள்: 1"அடிமலர் போற்றவும் போற்றியன் பாலிவ ளாய்முடிக்கியான் கடிமலர் சூட்டவுங் காட்டிய தாற்கள்வர் காய்ந்தெரியுந் துடிமலர் சீர்க்கெதிர் கூகை யிரட்டுஞ் சுரத்திடையோர் வடிமலர் வேற்படை யான்வாணன் மாறையென் மாதவமே." எனவும், 2"வண்புறப் புறவின் செங்காற் சேவல் களரி யோங்கிய கவைமுட் கள்ளி முளரியங் குடம்பை யீன்றிளைப் பட்ட வயவுநடைப் பேடை யுணீய மன்னர் முனைகவர் முதுபா ழுகுநெற் பெறூஉ மாணில் சேய்நாட் டதரிடை மலர்ந்த நன்னாள் வேங்கைப் பொன்மருள் புதுப்பூப் பரந்தன நடக்கயாங் கண்டன மாதோ காணினி வாழியென் நெஞ்சே நாண்விட் டருந்துய ருழந்த காலை மருந்தெனப் படூஉ மடவோ ளையே." எனவும் வரும். கண்டோர் அயிர்த்தற்குச் செய்யுள்: 3"சையத் திரள்புயன் சந்திர வாணன் றனிபுரக்கும் வையத் துறைகின்ற மானிட ரோவன்றி வானவரோ நையப் படுமழல் வெஞ்சுரத் தூடு நடந்தவரென் றையப் படுவதல் லாலுண்மை சால வறிவரிதே." எனவும், 4"வில்லோன் காலன கழலே தொடியோள் மெல்லடி மேலன சிலம்பே நல்லோர் யார்கொ லளியர் தாமே யாரியர் கயிறாடு பறையிற் கால்பொரக் கலங்கி வாகை வெண்ணெற் றொலிக்கும் வேய்பயி லழுவ முன்னி யோரே."
1. த. கோ. செ : 318. 2. நற்றிணை, செ : 384. 3. த. கோ. செ : 319. 4. குறு. செ : 7.
|