221

ஈறாகச் சொல்லப்பட்ட இவ்வொரு மூன்றும் தலைமகள் செவிலித்தாய் புலம்பற்கு உரியவாம் என்றவாறு.

அவற்றுள், செவிலி பாங்கியை வினவற்குச் செய்யுள்:

1"நலம்புனை யாயமு நீயுநற் றாயொடு நானுநன்பொன்
சிலம்புயர் சோலையுஞ் சிற்றிலும் பேரிலுந் தெண்டிரைமேல்
வலம்புரி யூர்வயல் சூழ்தஞ்சை வாணனை வாழ்த்தலர்போற்
புலம்புற மாதரெங் கேமக ளேதனிப் போயினளே."

என வரும்.

பாங்கி செவிலிக்கு உணர்த்தற்குச் செய்யுள்:

2"வெறுத்தா ரொறுத்துரை மேலுநங் கேளிர் விழைதலின்றி
மறுத்தா ரவற்கு மணமத னாற்றஞ்சை வாணர்பிரான்
கறுத்தார் புரத்து நடந்தனள் காளைபின் காமர்கற்பாற்
பொறுத்தாளழற்சுரந் தன்னையன்னாய்நின் பொலங்கொடியே."

எனவும்,

3"செவ்வாய்க் கரியகட் சீரினாற் கேளாதுங்
கவ்வையாற் காணாது மாற்றாது - மவ்வாயந்
தார்த்தத்தை வாய்மொழியுந் தண்கயத்து நீலமும்
ஓர்த்தொழிந்தா ளென்பேதை யூர்ந்து."

எனவும் வரும்.

பாங்கியின் உணர்ந்த செவிலி தேற்றுவார்க்கு எதிரழிந்து மொழிதற்குச் செய்யுள்:

4"மாறா வளவயல் சூழ்தஞ்சை வாணன்றென் மாறையென்க
ணாறா வருந்துய ராற்றுகின் றீரறி வேகொளுத்தி
யூறா வனகடிந் தென்முலை யூறமிர் தூட்டியின்சொல்
கூறா வளர்த்ததற் கோவென்னை நீத்ததென் கோல்வளையே."

எனவும்,

5"அத்த நீளிடை யவனொடு போகிய
முத்தேர் வெண்பன் முகிழ்நகை மடவரல்
தாய ரென்னும் பெயரே வல்லா


1. த. கோ. செ : 323.

2. த. கோ. செ : 324.

3. திணைமாலை நூற் செ : 73.

4. த. கோ. செ : 325.

5. ஐங்குறு. செ : 380.